கரையை தொடாத அலைகள்
Appearance
கரையைத் தொடாத அலைகள் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | அருண் பிரசாத் மூவீஸ் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | அருண் இளவரசி மனோரமா வி. கே. ராமசாமி கங்கா கே. ஆர். விஜயா செந்தில் |
வெளியீடு | 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கரையைத் தொடாத அலைகள் இயக்குநர் பி. மாதவன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அருண், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இத்திரைப்படம் 1985ஆம் ஆண்டு வெளியானது.[1]
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நேரம் தவறுவதாலும், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது எத்தகைய விளைவுகளைக் கொண்டு வரும் என்பதைக் காட்டும் கதை. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் கதாநாயகன் , எதிலும் நேரம் கடைபிடிப்பதில்லை. இதனால் பெற வேண்டிய வேலையை இழக்கிறான். சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாததால் காதலியையும் இழக்கிறான். இறுதியில் தன்னைக் காதலிக்கும் ஒரு பெண்ணை மணமுடிக்க எண்ணுகிறான். அவன் எண்ணம் நிறைவேறியதா என்று செல்லும் கதையின் முடிவு .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-258. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://en.600024.com/movie/karaiyai-thodadha-alaigal/ பரணிடப்பட்டது 2011-06-01 at the வந்தவழி இயந்திரம்