அக்னி பார்வை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்னி பார்வை
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஎஸ். செல்வரத்தினம்
திரைக்கதைசு. திருநாவுக்கரசர்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
படத்தொகுப்புஸ்ரீனிவாஸ் கிருஷ்ணா
கலையகம்பொன்மனம் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 7, 1992 (1992-02-07)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்னி பார்வை (agni paarvai) என்பது 1992 இல் வெளியான குற்றவியல் சார்ந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. மாதவன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சு. திருநாவுக்கரசர், நிழல்கள் ரவி, சரண்யா பொன்வண்ணன், ராம்குமார், அஞ்சு ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை எஸ். செல்வரத்தினம் தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார். 1992/பிப்ரவரி /7 ஆம் திகதி வெளியிடப்பட்டது.[1][2]

கதைச்சுருக்கம்[தொகு]

ராஜா (சு. திருநாவுக்கரசர்) ஒரு நேர்மையான காவல் அதிகாரி. அவர் புதிய திணைக்களம் ஒன்றிற்கு இடமாற்றம் பெற்று வருகின்றார். அவ்வூர் அவருக்கு புதிதாகும். அவ்வூரில் உள்ள அரசியல் வாதி இன்பசேகரன் (நிழல்கள் ரவி) அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். இன்பசேகரனோ, ராஜாவை தன்பிடிக்குள் கொண்டுவர விரும்பியபோது ராஜாவோ அதனை நிராகரித்தான். அதேநேரம் சுந்தர் (ராம்குமார்) அமைச்சரின் மகளை காதலிக்க அவளோ அவனை முன்னர் ஒருமுறை கல்லூரியில் அவனிடம் தோற்றதிற்காக பழிவாங்குகிறாள். சுந்தர் ஏழைமாணவன் அவன் அதன்பின்னர் கல்லூரியில் இருந்து விரட்டப்பட்டான்.பின்னர் ஆட்டோ ஓட்டுனராக மாறுகிறான். அதன்பிறகு இன்பசேகரின் சகோதரன் ராஜாவின் சகோதரியை கொன்றுவிடுகிறான். அதற்காக ராஜா இன்பசேகரனை பழிவாங்குவதாக சபதம் எடுக்கிறான். அதன்பின்னர் ராஜா என்ன செய்கிறான் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

 • சு. திருநாவுக்கரசர் - பொலிஸ் இன்ஸ்பெக்டர்
 • நிழல்கள் ரவி- எம்எல்ஏ இன்பசேகரன்
 • சரண்யா பொன்வண்ணன்- சீதா
 • ராம்குமார் - சுந்தர்
 • அஞ்சு - சாந்தி
 • கே. ஆர். விஜயா - ராஜாவின் தாய்
 • ராதாரவி- அமைச்சர் திருமூர்த்தி
 • எஸ். எஸ். சந்திரன்- தேவராஜ்
 • சின்னி ஜெயந்த்
 • அமிர்தராஜ்
 • டிஸ்கோ சாந்தி
 • பூரணி
 • தீபா
 • எஸ். என். லக்ஷ்மி
 • வாசுகி - பாக்கியலட்சுமி
 • சத்யபிரியா
 • பேபி சத்யா
 • மாஸ்டர் டிங்கு
 • எஸ். செல்வரத்தினம்

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை வெளியீடு 1992 ம் ஆண்டு நடைபெற்றது. இத்திரைப்படத்தின் பாடல்வரிகளை வாலி, கங்கை அமரன், புலமைப்பித்தன் மற்றும் குருவிக்கரம்பை சண்முகம் ஆகியோர் எழுதியுள்ளனர்.[3][4]

இத்திரைப்பட பாடல்களை மலேசியா வாசுதேவன், சொர்ணலதா, மனோ, கே. எஸ். சித்ரா, எஸ் ஜானகி ஆகியோர்கள் பாடியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Agni Paarvai (1992) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2014-04-17.
 2. "Filmography of agni paarvai". cinesouth.com. மூல முகவரியிலிருந்து 7 April 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-04-17.
 3. "Download Agni Paarvai by Ilaiyaraaja on Nokia Music". music.ovi.com. மூல முகவரியிலிருந்து 19 April 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-04-17.
 4. "MusicIndiaOnline — Agni Paarvai(1992) Soundtrack". mio.to. பார்த்த நாள் 2014-04-17.