மோகமுள் (புதினம்)
மோகமுள் தி. ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற ஒரு புதினம்.[1] இது தமிழ்த் திரைப்படமாக வெளிவந்தது. கருநாடக இசையோடு தொடர்புடைய புதினம்.
கதை
[தொகு]அந்தணர் குலத்தில் பிறந்த பாபு மற்றும் மராட்டிய வம்சாவழித் தோன்றலாக, காலவோட்டத்தில் தஞ்சை பூமியில் தங்கி விட்ட இனத்தைச் சார்ந்த யமுனா ஆகியோரின் வாழ்வினையும், பாபு அவள் மீது கொள்ளும் சற்றே மரபு மீறிய காதலையும் பற்றியதான இப்புதினம், ஜானகிராமனின் இதர பல புதினங்களைப் போலவே, கும்பகோணச் சூழலில், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புனையப்பட்டு, அக்கால கட்டத்திய நடைமுறைகளையும், சமுதாயச் சட்டங்களையும், நம்பிக்கைகளையும் விரித்துரைத்து அக்காலத்தினை ஆவணப்படுத்தும் ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. இதன் அடிநாதமாக கருநாடக இசை மற்றும் அதனைப் பழகுவோர் பற்றிய ஒரு விமர்சன நூலாகவும் இருப்பது இதன் சிறப்பு. இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றோடொன்று முரண்படாது, ஒன்றையொன்று தாங்கிப் பிடித்ததாக அமைத்திருப்பது தி.ஜானகிராமனின் நுண்ணிய கருத்தாற்றலையும், தாம் எழுதும் விடயங்கள் பற்றி அவருக்கு இருந்த ஆளுமையையும் பறையறிவிக்கிறது.
தி.ஜானகிராமனின் மிக அற்புதமான படைப்பு என இது இன்றளவும் போற்றப்படுகிறது.
திரைப்படம்
[தொகு]1995ஆம் ஆண்டு ஞானசேகரன் இயக்கத்தில் புதுமுகங்களைக் கொண்டு மோகமுள் எனும் பெயரில் திரைப்படமாகவும் இது வெளியானது. வணிக ரீதியாக அவ்வளவாக வெற்றி பெறவில்லை எனினும், விமர்சன ரீதியாக திரைப்படமும், இதில் இளையராஜாவின் இசையும் பாராட்டுப் பெற்றன.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ மோக முள்ளும் ரதிநிர்வேதமும்- செல்வ புவியரசன்- இந்து தமிழ்திசை 28 ஜனவரி 20