உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சீவ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சீவ் குமார்
2013இல் சஞ்சீவ் குமாரின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் வில்லை
பிறப்புஹரிஹர் ஜெத்தாலால் ஜாரிவாலா[1]
(1938-07-09)9 சூலை 1938
சூரத்து, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்(தற்போது குசராத்து, இந்தியா
இறப்பு6 நவம்பர் 1985(1985-11-06) (அகவை 47)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
மற்ற பெயர்கள்ஹரிபாய்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1960 முதல் 1985 வரை

சஞ்சீவ் குமார் (Sanjeev Kumar) என்கிற ஹரிஹர் ஜெத்தாலால் ஜாரிவாலா, (9 சூலை 1938 – 6 நவம்பர் 1985) ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். தஸ்தக் (1971) மற்றும் கோஷிஷ் (1973) ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல பெரிய விருதுகளை இவர் வென்றார். இவர் காதல் திரைப்படங்களில் இருந்து அதிரடித் திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். குமார் தனது வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களை கையாளுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அர்ஜுன் பண்டிட், ஷோலே மற்றும் திரிசூல் போன்ற ஓர் இந்தி தமிழ் படங்களின் மறுதயாரிப்புகளில் இணைந்து, கிலோனா, யெஹி ஹை ஜிந்தகி, நயா தின் நை ராத், தேவதா, இட்னி சி பாத் மற்றும் ராம் தேரே கித்னே நாம் போன்ற திரைப்படங்களில் இவரது திறமைகளைக் காட்டியுள்ளார். அவர் கட்தி, சிகர், உல்ஜான் மற்றும் திருஷ்னா போன்ற சஸ்பென்ஸ்-திரில்லர் படங்களில் நடித்தார். மன்ச்சாளி, பாடி பட்னி அவுர் வோஹ், அங்கூர், பிவி-ஓ-பிவி மற்றும் ஹீரோ போன்ற நகைச்சுவைப் படங்களில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரங்களின் உண்மையான தன்மை மற்றும் உண்மையான சித்தரிப்புக்காக அவர் நன்கு நினைவுபடுத்தப்படுகிறார். அங்கூர் படத்தில் அவரது இரட்டை வேடத்தில் நடித்ததற்காக ஃபோர்ப்ஸ் இந்தியாவின் இந்திய சினிமாவின் 100 ஆண்டுகள் கொண்டாட்ட விழாவில் முதல் 25 இடங்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

சஞ்சீவ் குமார் 'ஹரிஹர் ஜெத்தாலால் ஜாரிவாலா என்ற இயற்பெயருடன் குஜராத்திலுள்ள சூரத் என்ற இடத்தில் குஜராத்தின் கத்ரி குடும்பத்தில் பிறந்தார்.[1][3] சூரத்தில் அவரது இளமைக் காலத்தில் கழித்தார். அவரது குடும்பம் இறுதியாக மும்பையில் குடியேறியது. திரைப்படக் கல்லூரியின் படிப்பு அவரை பாலிவுட்டிற்கு வழிநடத்தியது, அங்கு இறுதியாக அவர் ஒரு திறமையான நடிகர் ஆனார். குமாருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருந்தார்கள்.

தொழில்[தொகு]

குமார் தனது நடிப்பு வாழ்க்கையை ஒரு மேடை நடிகராகத் தொடங்கினார், மும்பையில் இந்திய மக்கள் திரையரங்கு சங்கத்தில் (IPTA) தொடங்கி பின்னர் இந்திய தேசிய திரையரங்கில் சேர்ந்தார்.[3] 22 வயதான இவர் ஒரு நாடக நடிகராக இருந்தாலும், அவர் வயதான பாத்திரங்களில் நடிக்க விரும்புவார், ஆர்தர் மில்லரின் ஆல் மை சன்ஸ் என்ற தழுவலில் அவர் ஒரு வயதான மனிதனாக நடித்தார். அடுத்த ஆண்டில், ஏ.'கே. ஹங்கல் இயக்கிய நாடகமான தம்ருவில் குமார் மீண்டும் ஆறு குழந்தைகளுடன் 60 வயதான பாத்திரத்தில் நடித்தார்.[1]

குமார் 1960 ல் ஹம் ஹிந்துஸ்தானியில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். ஒரு கதாநாயகனாக அவரது முதல் படம் நிஷான், இது 1965இல் வெளிவந்தது. 1968 ஆம் காலகட்டத்தின், பிரபல நடிகரான, திலீப் குமாருடன், சங்கர்ஷ் என்றப் படத்தில் இணைந்து நடித்தார்.

1966 ஆம் ஆண்டு குஜராத்தி கவிஞர் கலப்பியின் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்தார், பத்மாராணி அவரது மனைவி, ரமா என்ற கதாப்பாத்திரத்திலும் மற்றும் காதலியாக அருணா இராணியும் நடித்திருந்தனர். இந்த படம் மன்ஹர் ரஸ்காபூர் என்பவரால் இயக்கப்பட்டது.[4] பின்னர், அருணா இராணி, சஞ்சீவ் குமாருக்கு இணையாக மற்றொரு குஜராத்தி திரைப்படமான மேரே ஜாவுன் பலே பர் (1968) என்றத் திரைப்படத்தில் நடித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

குமார் தனது வாழ்நாள் முழுவதும் தனியாக இருந்தார். 1973 ஆம் ஆண்டில் ஹேமா மாலினியை விரும்பினார், 1976 இல் அவருக்கு முதன்முதலாக மாரடைப்பு ஏற்படும்வரை அவர்கள் தொடர்பில் இருந்தனர். பின்னர் நடிகை சுலக்ஷணா பண்டிட் அவரை விரும்பி திருமணம் செய்துகொள்ள விரும்பினார், ஆனால் இருவரும் திருமணம் ஆகாதவர்களாகவே இருந்தனர்.[5] குமார் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார், இதன் விளைவாக சுலக்ஷணா வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டார்.

திரைப்படத் துறையில் ராஜேஷ் கன்னா, ஹேமா மாலினி, சஷி கபூர், ஷர்மிளா தாகூர், தனுஜா, தேவன் வர்மா, சிவாஜி கணேசன் மற்றும் பி.நாகி ரெட்டி ஆகியோர் இவரது நெருங்கிய நண்பர்கள் ஆவர். அவர் தன்னைவிட இளையவர்களிடம் நல்ல நண்பராக இருந்தார். நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனருமான சச்சின் பில்கோங்க்கர் மற்றும் நடிகை சரிகா ஆகியோரிடமும் நட்புடன் இருந்தார்.

உடல்நல பிரச்சினைகள் மற்றும் இறப்பு[தொகு]

குமார் ஒரு பிறவியிலேயே இதயக் கோளாருடன் பிறந்தார், அவருடைய குடும்பத்தில் பல உறுப்பினர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததில்லை. அவரது முதல் மாரடைப்புக்குப் பிறகு, அவர் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். எனினும், 1985 நவம்பர் 6 இல், 47 வயதில், அவருக்கு பெரும் மாரடைப்பு ஏற்பட்டது, இதனால் அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது இளைய சகோதரன் நிக்குல் அவருக்கு முன் இறந்தார், அவரது சகோதரர் கிஷோர் ஆறு மாதங்களுக்கு பின்னர் இறந்தார்.[1][6] பல வயதான பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் என்றாலும், அவர் 50 வயதை அடைவதற்கு முன்பு இறந்தார்.

சஞ்சீவ் குமார் நடித்த 10 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அவரது இறப்புக்குப் பிறகு வெளிவந்தன, கடைசியாக 1993 ஆம் ஆண்டில் ஃபுரொஃபசர் கி படோசான் என்றப் படம் வெளியிடப்பட்டது. அவரது மரணத்தின் போது, இந்த படத்தின் நான்கில் மூன்று பகுதி மட்டுமே நிறைவடைந்திருந்தது, என்வே குமாரின் கதாபாத்திரத்திற்காக இரண்டாவது பாதியில் கதையை மாற்றுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்தனர்.

விருதுகள்[தொகு]

தேசிய திரைப்பட விருதுகள்[தொகு]

  • சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது

பிலிம்ஃபேர் விருதுகள்[தொகு]

சஞ்சீவ் குமார் 14 ஃபிலிம்பேர் விருதுகள்,[7] சிறந்த துணை நடிகர் மற்றும் மீதமுள்ள சிறந்த நடிகருக்கான மூன்று விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான விருதுகளையும், சிறந்த துணை நடிகருக்கான விருதையும் அவர் வென்றார்.

  • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
  • சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Salt-and-pepper memories with Sanjeev Kumar". Hindustan Times. 4 November 2012. Archived from the original on 15 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Sanjeev Kumar: Movies, Photos, Videos, News & Biography | eTimes. Timesofindia.indiatimes.com (1938-07-09). Retrieved on 2018-11-08.
  3. 3.0 3.1 "He was an actor for all seasons". The Sunday Tribune. 13 August 2000. பார்க்கப்பட்ட நாள் 2013-08-12.
  4. K. Moti Gokulsing; Wimal Dissanayake (17 April 2013). Routledge Handbook of Indian Cinemas. Routledge. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-77284-9. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
  5. "Whatever happened to....... Sulakshana Pandit". Filmfare. Archived from the original on 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
  6. "Sanjeev Kumar". upperstall.com.
  7. "Sanjeev Kumar Awards". Bollywood Hungama. Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ்_குமார்&oldid=3944383" இலிருந்து மீள்விக்கப்பட்டது