திருவிளையாடல் ஆரம்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவிளையாடல் ஆரம்பம்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்பூபதி பாண்டியன்
தயாரிப்புவிமலா கீதா
கதைபூபதி பாண்டியன்
இசைடி. இமான்
நடிப்புதனுஷ்
சிரேயா சரன்
பிரகாஷ் ராஜ்
கருணாஸ்
சரண்யா பொன்வண்ணன்
ஒளிப்பதிவுஎஸ்.வைதி
படத்தொகுப்புஜீ.சசிகுமார்
கலையகம்ஆர்.கே புரடக்சன்
வெளியீடு15 திசம்பர் 2006 (2006-12-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருவிளையாடல் ஆரம்பம் என்பது 2006 இல் வெளியான தமிழ் காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பூபதி பாண்டியன் இயக்கினார்.விமலா கீதா என்பவர் தயரித்தார் . தனுஷ் மற்றும் சிரேயா சரன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் பிரகாஷ் ராஜ், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 15/திசம்பர்/2006 இல் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படம் வியாபாரா ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது[1]

நடிகர்கள்[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

திருக்குமரன் (தனுஷ்) எந்த விடயத்திலும் கவலை அற்றிருந்தான். அவனுடைய நண்பர்களுடன் (ரைகர் குமார் (கருணாஸ்), சுகுமார் மற்றும் ஏனையோர்) பொழுதுபோக்குவதைப் பிரதான தொழிலாகக் கொண்டிருந்த அவன் பிரியாவுடன் காதல் கொள்கின்றான். பிரியாவின் அண்ணன் குரு பெரும் பணக்காரர். இவர்களின் இக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பின்னர் திருவிற்கும் குருவிற்கும் நடைபெறும் எலி பூனை சண்டையில் திரு வெல்கிறான்.

மீள் உருவாக்கம்[தொகு]

2007 ல் இத்திரைப்படம் தெலுங்கில் டக்கரி எனும் பெயரில் வெளியானது. அத்திரைப்படத்தில் நிதின் மற்றும் சதா ஆகியோர் நடித்திருந்தனர். 2011 ல் கன்னடத்தில் தூள் எனும் பெயரில் வெளிவந்தது. அத்திரைப்படத்தில் யோகேஷ் மற்றும் எயின்ரீட்டா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜும் நடித்திருந்தார்.[2] இத்திரைப்படம் 2012 ல் வங்காள மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரியா மொழியில் ரங்கீலா டொக்கா எனும் பெயரிலும் வெளிவந்திருந்தது.

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை வைரமுத்து, நா. முத்துக்குமார், விவேகா மற்றும் திரைவாணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[3] 1986 இல் வெளியான மிஸ்டர் பாரத் எனும் படத்தில் இருந்து 'என்னம்மா கண்ணு' எனும் பாடல் மீள்கலப்பு இத்திரைப்படத்தில் இணைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thiruvilayaadal Arambham Review - Tamil Movie Thiruvilayaadal Arambham Review". Nowrunning.com (2006-12-22). பார்த்த நாள் 2018-07-18.
  2. "Yogi-Andrita in Dhool". Sify.com. மூல முகவரியிலிருந்து 2013-12-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2018-07-18.
  3. "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". பார்த்த நாள் 18 July 2018.
  4. Cinema Plus. "Mix and match - CHEN - The Hindu". Web.archive.org. பார்த்த நாள் 2018-07-18.