உள்ளடக்கத்துக்குச் செல்

வா மகளே வா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வா மகளே வா
இயக்கம்விசு
தயாரிப்புஎன். ராமசாமி
கதைவிசு (வசனம்)
திரைக்கதைவிசு
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 4, 1994 (1994-12-04)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வா மகளே வா ( vaa magale vaa) 1994 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். விசு இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் விசு, குஷ்பு, ரேகா, வீரபாண்டியன் ஆகியோரும் அவர்களுடன் டெல்லி கணேஷ், சார்லி, தியாகு, ரீ. பி. கஜேந்திரன், ரீ. எஸ். பாலச்சந்தர் ஆகியோரும் நடித்திருந்தனர். என். ராமசாமி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் டிசம்பர் 4, 1994 இல் வெளியிடப்பட்டுள்ளது.[1]

கதைச்சுருக்கம்

[தொகு]

உமா (குஷ்பு) ஒரு வக்கீல். அவள் ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாதனின் (விசு) மகளாவாள். . தன் வீட்டு பணியாட்களிடம் தன் நண்பர்களுடன் பழகுவது போலவே பழகி வந்தார். உமா கல்லூரியில் படிக்கும் போது பாண்டியன் (வீர பாண்டியன்) என்பவரை காதலித்து வந்தாள். பாண்டியன் இப்பொழுது ஒரு காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தான். ஆனாலும் பாண்டியனுக்கு தனது தந்தையான சங்கர் ராமன் (ரீ. எஸ். பாலச்சந்தர்) மீது அதிகளவு பயம் இருந்தது. ஆனாலும் இரு வீட்டாரும் உமா மற்றும் பாண்டியன் திருமணத்திற்கு சம்மதித்தனர். ஒருநாள் உமா பாண்டியனை அவன் வேலை செய்யும் காவல் நிலையத்திற்கு பார்க்க சென்றபோது; மதுபானசாலையின் அருகில் ஒனுவனை பார்தாள் , அவன் பார்பதற்கு அப்பாவியாக இருந்தான். ஆனால் பாண்டியனோ ஒரு முக்கியமான கொலை குற்றவாளி எனக்கருதி அவனை விடுவிக்க மறுத்தான். அக் குற்றவாளியோ ஒரு ஏழை தொலைக்காட்சி இயந்திரக் கைவினைஞர் ராமன் (சார்லி) ஆவான். உமாவோ அவனது வக்கீலாக சென்று ராமனிற்கு பெயில் வாங்கிதந்தாள். மேலும் அவ்வழக்கை ஆராய்ந்த போது குற்றவாளி தன் தந்தை விஸ்வநாதன் என கண்டுபிடித்தாள். இதன்பிறகு வழக்கு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்

[தொகு]
  • விசு - விஸ்வநாதன்
  • குஷ்பு - உமா
  • ரேகா - கல்யாணி
  • வீர பாண்டியன்- பாண்டியன்
  • டெல்லி கணேஷ்- மகாதேவ ஜயர்
  • சார்லி - ராமன்
  • தியாகு - அமர்நாத்
  • ரீ. பி. கஜேந்திரன் - முத்து
  • ரீ. எஸ். பாலச்சந்தர் - சங்கர் ராமன்
  • குள்ளமணி - குள்ளன்
  • மனேஜர் சீனா
  • அம்பி - சங்கர் ராமன்
  • பி. ஆர். வரலக்சுமி - சரஸ்வதி
  • கவிதாஸ்ரீ
  • சண்முகசுந்தரி - குள்ளனின் தாய்
  • சுமதிஸ்ரீ - அஞ்சல
  • கோவை செந்தில்
  • பாண்டியன் - சிறப்பு தோற்றம்
  • வெண்ணிற ஆடை மூர்த்தி - புஜங்க ராவோ (சிறப்பு தோற்றம்)
  • விவேக் - சிறப்பு தோற்றம்

இசை

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். 1993 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அமைந்துள்ள ஐந்து பாடல்களுக்கும் பாடல்வரிகளை முத்துலிங்கம் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vaa Magale Vaa (1994) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_மகளே_வா_(திரைப்படம்)&oldid=3660870" இலிருந்து மீள்விக்கப்பட்டது