உள்ளடக்கத்துக்குச் செல்

வாசுகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசுகி
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புஜீ. வீ. ஆனந்தன்
கதைகஸ்தூரி ராஜா
இசைஇளையராஜா
நடிப்புராஜேந்திர பிரசாத்
ஊர்வசி
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புஹரி - பழனி
கலையகம்ஆனந்த் மூவி லன்ட்
வெளியீடுஅக்டோபர் 30, 1997 (1997-10-30)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாசுகி (vasuki) என்பது 1997 இல் வெளிவந்த நகைச்சுவை நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். ஜீ. வீ. ஆனந்தனின் "ஆனந்த் மூவி லண்ட் " இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. ராஜேந்திர பிரசாத், ஊர்வசி ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார். அக்டோபர் 30, 1997 இல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் "பெல்லி கொடுக்கு அம்மவடுதுனு" எனும் பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.[1][2]

கதைச்சுருக்கம்

[தொகு]

வாசுகி (ஊர்வசி) அவளுடைய பால்கார அண்ணன் கபாலி (ஜனகராஜ்) மற்றும் அண்ணி பச்சையம்மா (ஜெயச்சித்ரா) ஆகியோருடன் வசித்து வந்தாள். ஒருநாள் அவர்களின் உறவினரான ராமசாமி (விசு) பெரும் தொகைப்பணத்துடன் அவர்களைப் பார்ப்பதற்கு வந்தார். அவர்களை ஓர் உதவிசெய்யும் படியும் வேண்டினார்.

முன்பு ராமசாமியின் மகள் பணக்கார மாப்பிள்ளையை (தலைவாசல் விஜய்) திருமணம் செய்திருந்தாள். ஆனாலும் அவர்களிற்கு அளிக்க வேண்டிய வரதட்சணையை அளிக்க முடியாமல் இருந்தார். இதனால் மாப்பிள்ளையின் தாய் பார்வதம் (லதா) ராமசாமியின் மகளை தினமும் துன்புறுத்தினாள். பார்வதம் தனது மகனிற்கு இரண்டாவது திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தாள். எனினும் ராமசாமி பணத்தை திரட்டினார். இருந்தாலும் அது பயனற்றுப்போனது.

இதற்காக பார்வதத்தை பழிவாங்க முடிவுசெய்து வாசுகியின் உதவியை நாடுகின்றார். வாசுகியும் ஒரு பணக்கார பெண்போல வேடமிட்டு பார்வதத்தை ஏமாற்றி அவரின் இரண்டாவது மகன் பாலுவை (ராஜேந்திர பிரசாத்) திருமணம் செய்கிறாள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 1997 ஆம் ஆண்டு இசை வெளியிடப்பட்டது. பாடல் வரிகளை கஸ்தூரி ராஜா எழுதினார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vasugi (1997) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
  2. "Vasuku (1997)". gomolo.com. Archived from the original on 2016-11-19. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
  3. "Vasuki Songs". play.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
  4. "Vasuki (1997)". mio.to. Archived from the original on 2016-11-19. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுகி_(திரைப்படம்)&oldid=4119534" இலிருந்து மீள்விக்கப்பட்டது