உள்ளடக்கத்துக்குச் செல்

தலைவாசல் விஜய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைவாசல் விஜய்
பிறப்புஏ. ஆர். விஜயகுமார்
ஆகஸ்ட் 4
சைதாப்பேட்டை, சென்னை
இருப்பிடம்கீழ்ப்பாக்கம், சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1992-தற்போது

தலைவாசல் விஜய் தமிழ் திரைப்பட நடிகர். மற்றும் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார்.[1] இவர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர், 1992இல் வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானார். அதில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்ததால் தனது பெயருக்கு முன்னால் தான் நடித்த முதல் படத்தின் பெயரை அடைமொழியாக வைத்து "தலைவாசல் விஜய்" என அழைக்கப்படுகிறார். இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் அல்லது குணசித்திர வேடங்களில் நடிப்பதின் மூலமாக அறியப்படுகிறார். குறிப்பாக, 2010இல் வெளியான ஆர். சுகுமாரனின் "யுகபுருஷன்" மலையாளப் படத்தில் இவர் ஏற்று நடித்த நாராயண குரு கதாபாத்திரம் பெரும் பெயரைப் பெற்றது.[2] இவர், தனது 25 வருட தொழில் வாழ்க்கையில் 200 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.[3]

திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]

தமிழ்

[தொகு]
எண் திரைப்படம் கதாபாத்திரம் இயக்குநர் ஆண்டு
1 தலைவாசல் பாடகர் செல்வா 1992
2 தேவர் மகன் கமல் சகோதரன் பரதன் 1992
3 மகாநதி கதாநாயகனின் மகனை தத்து எடுத்தவர் சந்தான பாரதி 1994
4 மகளிர் மட்டும் ரோகினியின் கணவன் சிங்கீத சீனிவாச ராவ் 1994
5 விஷ்ணு கதாநாயகன் தந்தையின் எதிரி எஸ். ஏ.சந்திரசேகர் 1995
6 கருவேலம்பூக்கள் ஆசிரியர் பூமணி 1996
7 காதல் கோட்டை ஆட்டோ ஓட்டுனர் அகத்தியன் 1996
8 காதலுக்கு மரியாதை கதாநாயகியின் சகோதரன் ஃபாசில் 1997
9 தேவதை நாசர் 1997
10 நந்தினி மனோபாலா 1997
11 சந்தோசம் அலுவலக பணியாள் 1997
12 பெரியதம்பி கதாநாயகன் தந்தை சித்ரா லட்சுமணன் 1997
13 காதலே நிம்மதி பாடகர் இந்திரன் 1998
14 தர்மா கதாநாயகன் சகோதரன் கேயார் 1998
15 அமர்க்களம் கதாநாயகியின் சகோதரன் சரண் 1999
16 சிம்மராசி கனகாவின் கணவன் ஈரோடு சௌந்தர் 1999
17 முகம் ஞான ராஜசேகரன் 1999
18 ராஜஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவர் ஆர். கே. செல்வமணி 1999
19 காதல் கவிதை கதாநாயகன் நண்பன் அகத்தியன் 1999
20 சந்தித்தவேளை கதாநாயகனின் உறவு வி ரவிச்சந்திரன் 2000
21 பிரியமானவளே எதிர்மறை நாயகன் செல்வா கே. செல்வபாரதி 2000
22 சுதந்திரம் கதாநாயகியின் தந்தை ராஜ்கபூர் 2000
23 கண்ணுக்குள் நிலவு ஃபாசில் 2000
24 ஜேம்ஸ் பாண்டு மேனேஜர் செல்வா 2000
25 இரண்யன் வின்சென்ட் செல்வா 2000
26 மகளிருக்காக இந்தியன் 2000
27 இளையவன் டி. பாபூ 2000
28 சபேஸ் காவலன் கே. சுபாஷ் 2000
29 சின்ன சின்ன கண்ணிலே அமிர்ஜான் 2000
30 என்னவளே கதாநாயகனின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜே. சுரேஷ் 2001
31 வல்லரசு எதிர்மறை நடிகர்களில் ஒருவர் என். மகாராஜன் 2001
32 வீட்டோட மாப்பிள்ளை விஜய்குமார் மகன் வி. சேகர் 2001
33 மாயன் விடுதலை போராட்ட வீரர் நாசர் 2001
34 நரசிம்மா காவலன் திருப்பதிசாமி 2001
35 மிட்டா மிராசு எதிர்மறை நாயகனின் மகன் களஞ்சியம் 2001
36 காசி வினயன் 2001
37 பார்த்தாலே பரவசம் கைலாசம் பாலசந்தர் 2001
38 ஆர். மகாதேவன் எதிர்மறை நாயகனின் நண்பன் அருண் பாண்டியன் 2002
39 துள்ளுவதோ இளமை கதாநாயகன் தந்தை கஸ்தூரி ராஜா 2002
40 பகவதி கதாநாயகனின் நண்பன் எதிர்நீச்சல். வெங்கடேஷ் 2002
41 உன்னை நினைத்து கதாநாயகியின் தந்தை விக்ரமன் 2002
42 காதல் கிருக்கன் சக்தி 2003
43 முத்தம் எஸ். ஏ. சந்திரசேகர் 2003
44 காலாட்படை ரமேஷ் 2003
45 ஜே ஜே கதாநாயகியின் தந்தை சரண் 2003
46 இனிது இனிது காதல் இனிது சக்தி சிதம்பரம் 2003
47 கையோடு கை ராஜன் சர்மா 2003
48 அன்பே அன்பே மணி பாரதி 2003
49 வானம் வசப்படும் பி. சி. ஸ்ரீராம் 2004
50 வர்ணஜாலம் சகோதரன் நகுலன் பொண்ணுசாமி 2004
51 நீ மட்டும் நடேஷ் 2004
52 பேரழகன் சோதிகாவின் சகோதரர் சசி சங்கர் 2004
53 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் மருத்துவர் சரண் 2004
54 போஸ் கதாநாயகனின் சகோதரர் செந்தில் குமார் 2004
55 தேவதையை கண்டேன் பூபதி ஜி. பூபதி பாண்டியன் 2005
56 ஆணை குழந்தையின் மாமா செல்வா 2005
57 டிரிம்ஸ் கஸ்தூரி ராஜா 2005
58 அலை காவல் ஆய்வாளர் எ. வெங்கடேஷ் 2005
59 ஆயுதம் முருகேஷ் 2005
60 பொன்னியின் செல்வன் ஓவியர் ராதா மோகன் 2005
61 அந்த நாள் ஞாபகம் மணி பாரதி 2005
62 நெஞ்சில் ஜில் ஜில் செல்வா 2006
63 குருசேத்திரம் ஜெயபாரதி 2006
64 சாசனம் ஜே. மகேந்திரன் 2006
65 நெஞ்சிருக்கும் வரை கதாநாயகன் தந்தை எஸ். ஏ. சந்திரசேகரன் 2006
66 சண்டக்கோழி எதிர்மறை நாயகனின் நண்பன் லிங்குசாமி 2006
67 நெஞ்சத்தைக் கிள்ளாதே அகத்தியன் 2007
68 அச்சச்சோ வி.எஸ் பால் ராய் 2007
69 நல்வரவு பால சூர்யா 2007
70 தோட்டா செல்வா 2008
71 உயிரின் ஓசைi இளவேனில் 2008
72 தித்திக்கும் இளமை சந்திரமோகன் 2008
73 எல்லாம் அவன் செயல் அந்நியன் ஷாஜி கைலாஷ் 2008
74 அறை எண் 305ல் கடவுள் சிம்பு தேவன் 2008
75 ஜெயம் கொண்டான் ஆர். கண்ணன் 2008
76 பத்து பத்து சத்யம் 2008
77 இன்பா கதாநாயகன் தந்தை எஸ். டி. வேந்தன் 2008
78 அபியும் நானும் பிரகாஷ் ராஜ்ன் நண்பன் ராதா மோகன் 2008
79 காதல் மெய்பட விஷ்வா தனுஷ் 2009
80 தீ ரத்னம் ஜி. கிச்சா 2009
81 குளிர் 100 டிகிரி பள்ளி முதல்வர் அனிதா உதிப் 2009
82 வாமனன் அகமத் 2009
83 ஆறு மனமே ஆறு சுதேஷ் சங்கர் 2009
84 பெண் சிங்கம் பாலி சிறிரங்கம் 2010
85 பீமா லிங்குசாமி 2008
86 தம்பிக்கு எந்த ஊரு பத்ரி 2010
87 நியூட்டனின் மூன்றாம் விதி தை முத்துசெல்வன் 2009
88 பயணம் ராதாமோகன் 2011
89 குரு பார்வை மனோஜ் குமார் 1999
90 ஸ்ரீ புஸ்பவாசகன் 2002
91 தென்னவன் நந்தகுமார் 2003
92 கத்திக்கப்பல் தினேஷ் செல்வராஜ் 2008
93 பார்க்கலாம் பழகலாம் பாஸ்கர் ஏ. எம் 2011
94 கைல காசு வாயில தோச ஆர். மணிவாசகம் 2011
95 அணில் மகேஷ்லால் 2011
96 நினைவில் நின்றவன் அகத்திய பாரதி 2011
97 ஊ லா ல ல ஜோதிக்கிருஷ்ணா 2011
98 புலன் விசாரனை பகுதி 2 ஆர். கே. செல்வமணி 2011
99 ஆயிரம் விளக்கு எஸ். பி. ஹோஸ்மி 2011
100 ஜெயமுண்டு பயமில்லை அன்பு 2011
101 தினந்தோறும் நாகராஜன் 1998
102 இவன் பார்த்திபன் 2002
103 தை புதுசு கே. ஆர் 1998
104 ராமானுஜன் சத்யபிரியா ராயர் ஞான ராஜசேகரன் 2013
105 சிங்கம் 2 சத்யாலின் தந்தை ஹரி 2013
106 தோனி மருத்துவர் பிரகாஷ் ராஜ் 2012
107 வாத்தியார் பள்ளி ஆசிரியர் ஏ.வெங்கடேஷ் 2006

தெலுங்கு

[தொகு]
எண் திரைப்படம் கதாப்பாத்திரம் இயக்குநர் ஆண்டு
1 ரக்சனா கதாநாயகனின் சகோதரன் செந்தில் குமார் 2005
2 கீகா தோஜா 2008
3 மரோ சரித்திரா கதாநாயகன் தந்தை 2010
4 ககனம் ஜகதீஷ் ராதா மோகன் 2011
5 பாகமதியே ஜி. அஷோக் 2018
6 யாத்ரா (2019 திரைப்படம்) மகி வி. ராகவ் 2019

மலையாளம்

[தொகு]
எண் திரைப்படம் கதாபாத்திரம் பட இயக்குநர் ஆண்டு
1 மதுரானம்பரகட்டு கல்கி பரமேஸ்வர் கமல் 2000
2 கேரளா ஹவுஸ் உடன் வில்பனக்கு பெரிய தேவர் தாகா 2004
3 யுகபுருஷன் நாராயணகுரு ஆர். சுகுமாரன் 2010
4 ஷிக்கார் ராவுத்தர் எம். பத்மகுமார் 2010
5 ஆகஸ்டு 15 (2011 படம்) டிஜிபி சாஜி கைலாஸ் 2011
6 தி பிலிம்ஸ்டார் காம்ரேட் ராகவன் சஞ்சீவ் ராஜ் 2011
7 தேஜா பாய் & ஃபேமிலி தாமோதர்ஜி திபு கருணாகரன் 2011
8 மேல்விலாசம் கலோனெல் சூரத் சிங் மாதவ் ராமதாசன் 2011
10 சினேகதரம் கிரீஷ் 2011
11 கர்மயோகி (2012 படம்)" வி.கே. பிரகாஷ் 2011
12 அச்சன்டே ஆண்மக்கள் சந்திரசேகரன் 2012
13 நித்ரா (2012 படம்) மாதவ மேனன் சித்தார்த் பரதன் 2012
14 ஹீரோ (2012 படம்) தர்மராஜன் மாஸ்டர் தீபன் 2012
15 சயலன்ட் வேலி சையத் உஸ்மான் 2012
16 மேட்னி (2012 படம்) நஜீப்பின் உப்பா அனீஷ் உபாசனா 2012
17 ஹிட் லிஸ்ட் ராபர்ட் பாலா (நடிகர்) 2012
18 லோக்பால் ராமபத்ரன் / பிபி ஜோஷி 2013
19 செலுலாயிட் முதலியார் கமல் 2013
20 பிரேக்கிங் நியூஸ் லைவ் சுரேந்திர மேனன் சுதிர் அம்பாலபாடு 2013
21 பேங்கிள்ஸ் சாலமன் ஷியாம் 2013
22 ரேடியோ டாக்டர் உமர் மொகமத் 2013
23 ஒலிப்போரு ஏ.வி. சசிதரன் 2013
24 நார்த் 24 காதம் ஸ்ரீகுமார் [[அனில் ராதாகிருஷ்ணன் மேனன் 2013
25 ஒரு குடும்ப சித்திரம் ஷண்முக வேல் ரமேஷ் தம்பி 2013
26 பிங்மேன் அவிரா ரெபேக்கா 2013
27 கேமர் ஆப்ரஹாம் கோஷி எம். ஆர். அனூப் ராஜ் 2014
28 லாவண்டர் ஜோசப் தரகன் அட்லஸ் டி. அலி 2015
29 காந்தாரி கேமியோ அஜ்மல் 2015
30 ஒரு நியூ ஜெனரேசன் பாணி 2015
31 கேம்பஸ் டைரி ஜீவன் தாஸ் 2016
32 வேதம் பிரசாத் யாதவ் 2017
33 கேப்டன் எஸ்பி ராஜசேகரன் பிரஜேஷ் சென் 2018
34 கினர் எம். ஏ. நிஷத் 2018

குரல்-ஒலிச்சேர்க்கை செய்த படங்கள்

[தொகு]

தொலைக்காட்சி தொடர்கள்

[தொகு]
தமிழ்
மலையாளம்
  • நீலாமாலா - (தூர்தர்ஷன் மலையாளம்)
  • கோபிகா - (தூர்தர்ஷன் மலையாளம்)
  • படவுகள் - (தூர்தர்ஷன் மலையாளம்)

விருதுகள்

[தொகு]

கேரள மாநில திரைப்பட விருதுகள்:

  • 2010 - (கேரள மாநில திரைப்பட விருது| சிறப்பு ஜூரி விருது ) - "யுகபுருஷன்"
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
  • 2012 - சிறந்த துணை நடிகருக்கான விருது - "கர்மயோகி" (2012 திரைப்படம்)
சன் குடும்பம் விருதுகள்
  • 2018 - "அழகு" தொலைக்காட்சித் தொடரில் சிறந்த தந்தையாக நடித்ததற்காக சன் குடும்பம் விருது

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவாசல்_விஜய்&oldid=4162364" இலிருந்து மீள்விக்கப்பட்டது