வாய்மையே வெல்லும் (திரைப்படம்)
![]() | This article needs more links to other articles to help integrate it into the encyclopedia. (ஏப்ரல் 2019) |
வாய்மையே வெல்லும் | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எஸ். ஆர். பாலாஜி |
கதை | பி. வாசு |
இசை | தேவா |
நடிப்பு | பார்த்திபன் ரச்சனா பானர்ஜி விசு ராதா ரவி வெண்ணிற ஆடை நிர்மலா மஜித் |
ஒளிப்பதிவு | ரவீந்தர் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | எஸ். பீ. பில்ம்ஸ் |
விநியோகம் | எஸ். பீ. சினிமா |
வெளியீடு | 14 பெப்பிரவரி 1997 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாய்மையே வெல்லும் என்பது 1997 இல் வெளியான குற்றவியல் சார்ந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் பார்த்தீபன், ரக்சனா பானர்ஜீ ஆகியோர் நடித்திருந்தனர். எஸ். ஆர். பாலாஜி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிப்ரவரி 14, 1997 இல் வெளியிடப்பட்டது.[1][2]
கதைச்சுருக்கம்.
[தொகு]குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பெருமாளின் மனைவி பிரசவத்தின் போது உயிரிழக்க பெருமாளோ குழந்தை பிறந்த துரதிஷ்டத்தினால் தான் தனது மனைவி இறந்தாள் என எண்ணுகிறான். பின்னர் பெருமாள் சரஸ்வதியை (வெண்ணிற ஆடை நிர்மலா) இரண்டாவதாக திருமணம் செய்கிறார். சரஸ்வதி பெருமாளின் மகனை தனது மகன் போல வளர்த்து வந்தார். ஆனால் பெருமாளோ ஒன்றும் அறியாத அப்பையனை சிறைச்சாலைக்கு அனுப்பினார்.
ராஜா (பார்த்தீபன்) ரிக்சாகாரனாகவும் அநியாயத்தை தட்டி கேட்கும் ரௌடியாகவும் மாறியிருந்தான். இதனால் அடிக்கடி சிறைச்சாலைக்கும் போய்வந்தான். மாரி (ஜோனன்) ஒரு பணக்கார வியாபாரியாகவும் இருந்தார். அவரின் அடியாளான காசி (மஜித்) பிள்ளைகளை கடத்தி அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணம் பறித்தான். ஓர் ஊடகவியலாளர் ராஜாவை பயன்படுத்தி தனது பிள்ளையை கடத்தல் காரர்களிடம் இருந்து பெற்றார். அதன்பின்னர் ராஜா பெருமாள், மாரி, காசி ஆகியோருக்கு எதிராக செயற்படுவது கதையின் இறுதி அம்சமாக அமைகிறது.
நடிகர்கள்
[தொகு]- பார்த்தீபன்- ராஜா (எமதர்ம ராஜா)
- ராச்சனா பானர்ஜி- மீனா
- ராஜன் பி. தேவ்- பெருமாள்
- விசு
- ராதா ரவி- ராஜேந்திரன்
- ஜனகராஜ்- மைக்கேல்
- வெண்ணிற ஆடை நிர்மலா- சரஸ்வதி
- மத்தியூ சாமரப்பள்ளி- முதலாவது வைத்தியர்
- ஜோஜன்- மாரி
- மஜித்- காசி
- ஹேமந்த் ராவன்- சிவராம்
- மோகன் வீ. ராம்-மோகன் ராம்
- பிரதாபஞ்சதந்திரன்
- விஜய் கிருஷ்ணராஜ்
- சச்சு
- மாஸ்டர் மகேந்திரன்-ராஜா (இளமையில்)
- பாண்டு
- மயில்சாமி-மயில்சாமி
- செல்லதுரை
- குள்ளமணி
- ஜோதி மீனா
- ஜோதி லக்ஷ்மி
- ரீ. கே. ராஜேஸ்வரி
இசை
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். 1997 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. பாடல்வரிகளை வாலி எழுதியுள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Filmography of vaimaye vellum". cinesouth.com. Archived from the original on 2006-10-29. Retrieved 2013-06-21.
- ↑ "Voymaiye Vellum (1997) Tamil Movie". spicyonion.com. Retrieved 2013-06-21.
- ↑ "Vaimaiye Vellum : Tamil Movie". hummaa.com. Retrieved 2013-06-21.
- Articles with too few wikilinks from ஏப்ரல் 2019
- All articles with too few wikilinks
- Articles covered by WikiProject Wikify from ஏப்ரல் 2019
- All articles covered by WikiProject Wikify
- 1997 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்