நீங்க நல்லா இருக்கணும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீங்க நல்லா இருக்கணும்
இயக்கம்விசு
தயாரிப்புஜி. வெங்கடசுவரன்
கதைவிசு
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்ஜி. வி. பிலிம்சு
வெளியீடு1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீங்க நல்லா இருக்கணும் 1992ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நிழல்கள் ரவி, பானுப்ரியா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மனோரமா, சந்திரசேகர் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரத்திரங்களிலும் நடித்திருந்தனர். எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1]

இதர தகவல்கள்[தொகு]

மதுவினால் உண்டாகும் தீமைகளை சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதாக இத்திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படம் சிறந்த சமூக கருத்துடைய திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்படத்தில் தோன்றினார்.[2] இத்திரைப்படம் தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்த முதல் திரைப்படமாகும்.

மேற்கோள்கள்[தொகு]