ஊமை விழிகள் (1986 திரைப்படம்)
| ஊமை விழிகள் | |
|---|---|
| இயக்கம் | அரவிந்தராஜ் |
| தயாரிப்பு | ஆபாவாணன் |
| கதை | ஆபாவாணன் |
| திரைக்கதை | ஆபாவாணன் |
| இசை | மனோஜ்-கியான் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | எ. ரமேஷ் குமார் |
| வெளியீடு | 15 ஆகத்து 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஊமை விழிகள் (Oomai Vizhigal) 1986-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2] இதை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களைக் கொண்டு எடுத்தார். இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா போன்றோர் இதில் நடித்திருந்தனர். இது திகில் கலந்த படமாக வந்தது.
கதைச் சுருக்கம்
[தொகு]சோழா பிக்னிக் வில்லேஜ் (இதன் உரிமையாளர் பி.ஆர்.கேயாக இரவிச்சந்திரன் நடித்துள்ளார்) என்ற இடத்திற்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். அதைப் பற்றி விசாரிக்க வரும் செய்தியாளர் இராஜா அங்கு நிகழும் மர்மத்தைப் பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். அவருக்குத் துணை புரிகின்றனர் 'தினமுரசு' செய்தி இதழின் உரிமையாளர் சந்திரனும் (ஜெய்சங்கர்), மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தீன தயாளனும் (விஜயகாந்த்).
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் - தீனதயாளன் (காவல்துறை கண்காணிப்பாளர்)
- அருண் பாண்டியன் - விஜய்
- கார்த்திக் - இரமேஷ் (சிறப்புத் தோற்றம்)
- ஜெய்சங்கர் - சந்திரன்
- சரிதா -சுமதி
- இரவிச்சந்திரன் - பி. ஆர். கே.
- மலேசியா வாசுதேவன் - இராஜா
- சந்திரசேகர் - இராஜா
- விசு -இரத்தினசபாபதி
- சிறீ வித்யா
- டிஸ்கோ சாந்தி
- இளவரசி
- தேங்காய் சீனிவாசன்
- சசிகலா
பாடல்கள்
[தொகு]இதில் பாடியிருப்பவர்கள் ஆபாவாணன், பி. பி. சீனிவாசு, ஜேசுதாசு, சசி ரேகா, எஸ். என். சுரேந்தர் [3]. இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆபாவாணன் இயற்றினார்.[4][5]
| வ. ௭ண் | பாடல் | பாடகர்கள் | அளவு |
|---|---|---|---|
| 1 | "கண்மணி நில்லு காரணம் சொல்லு" | எஸ். என். சுரேந்தர், பி. ௭ஸ். சசிரேகா | 4:46 |
| 2 | "மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம்" | எஸ். என். சுரேந்தர், பி. ௭ஸ். சசிரேகா | 4:30 |
| 3 | "இராத்திரி நேரத்துப் பூஜையில்" | பி. ௭ஸ். சசிரேகா | 4:35 |
| 4 | "தோல்வி நிலையென நினைத்தால்" | பி. பி. ஸ்ரீனிவாஸ், ஆபாவாணன் | 4:07 |
| 5 | "நிலைமாறும் உலகில்" | கே. ஜே. யேசுதாஸ் | 4:32 |
| 6 | "குடுகுடுத்த கிழவனுக்கு" | ஆபாவாணன், எஸ். என். சுரேந்தர் | 3:57 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dhananjayan 2011, ப. 100.
- ↑ "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). சினிமா எக்ஸ்பிரஸ்: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM.
- ↑ இன்பம் இங்கே பரணிடப்பட்டது 2011-10-16 at the வந்தவழி இயந்திரம்/
- ↑ "Oomai Vizhigal (1986)". Raaga.com. Archived from the original on 27 December 2013. Retrieved 28 November 2011.
- ↑ "Oomai Vizhigal (1985) Tamil Super Hit Movie LP Vinyl Record by Manoj Giyan". Disco Music Center. Archived from the original on 23 February 2023. Retrieved 23 February 2023.
நூற் பட்டியல்
[தொகு]- Dhananjayan, G. (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1977–2010. Galatta Media. கணினி நூலகம் 733724281.
வெளி இணைப்புகள்
[தொகு]- கட்டுரை.காம் பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம்
- பிரசாத் வலைப்பதிவு
- நரேசு வலைப்பதிவு
- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- தகாத உறவு குறித்தான இந்தியத் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- மலேசியா வாசுதேவன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்