ஆபாவாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபாவாணன்
பிறப்புகுமாரபாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்,
திரைக்கதை ஆசிரியர்
அறியப்படுவதுஊமை விழிகள்,
செந்தூரப்பூவே

ஆபாவாணன் (Aabavanan) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியரும், வசன எழுத்தாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார். இவர் குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி ஆவார்கள். இவரின் இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களை எடுத்து ஆபாவாணன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

திரை வாழ்க்கை[தொகு]

திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் ஊமை விழிகள். இதுவே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் படமாகும். இவர் உழவன் மகன், செந்தூரப்பூவே, தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கருப்பு ரோஜா முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.

திரைப்பட விபரம்[தொகு]

பங்காற்றிய திரைப்படங்கள்[தொகு]

இதர பணிகள்[தொகு]

கங்கா-யமுனா-சரஸ்வதி என்ற நெடுந்தொடரை தொலைக்காட்சிக்காக எடுத்தார். இது ராஜ் தொலைக்காட்சியில் வந்தது.

துணுக்குகள்[தொகு]

ராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குனர் துறையிலும் பயின்றார்கள்.

ஊமை விழிகள் படத்தில் "தோல்வி நிலையென நினைத்தால்" , "குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாண பேச்சு" ஆகிய பாடல்களையும் தம்பி அர்ஜூனா படத்தில் புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது என்ற பாடலையும் இரண்டு பேர் படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்.

தமிழ் திரையுலகுக்கு டி. டி. எசு என்னும் ஒலி வடிவத்தை தனது கருப்பு ரோஜா படம் மூலம் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபாவாணன்&oldid=3785063" இருந்து மீள்விக்கப்பட்டது