அண்ணன் என்னடா தம்பி என்னடா
அண்ணன் என்னடா தம்பி என்னடா | |
---|---|
இயக்கம் | விஜய் கிருஷ்ணராஜ் |
தயாரிப்பு | பூவரசன் |
கதை | விஜய் கிருஷ்ணராஜ் |
இசை | கியான் வர்மா ஆபாவாணன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இராஜாராமன் |
படத்தொகுப்பு | சீனிவாச கிருஷ்ணா |
கலையகம் | சிறீ அத்தனூர் அம்மன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 25 செப்டம்பர் 1992 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அண்ணன் என்னடா தம்பி என்னடா (Annan Ennada Thambi Ennada) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம். ஆகும். விஜய் கிருஷ்ணராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், அர்ஜுன், நிரோஷா, ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு கியான் வர்மா, ஆபாவாணன் ஆகியோர் இசை அமைத்தனர். படமானது 25 செப்டம்பர் 1992 இல் வெளியானது.[1] இந்த படம் பின்னர் தெலுங்கில் பகத் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
நடிகர்கள்[தொகு]
- சிவகுமார் ராக்கைய கௌண்டராக
- அர்ஜுன் சங்கராக
- விஜய் கிருஷ்ணராஜ் பொன்னனராக
- கே. ஆர். விஜயா பவனாவாக
- நிரோஷா
- ரேகா
- மனோரமா
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- செந்தாமரை
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- சபிதா ஆனந்த்
- டி. பி. கஜேந்திரன்
இசை[தொகு]
இத்திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் கியான் வர்மா அமைத்தார். 1992 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில் ஏழு பாடல்கள் உள்ளன.
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "இரவு நடகம்" | ஜமுனா ராணி, ஜிக்கி | |
2 | "பப்பரப்பா" | டி. எம். எஸ் பால்ராஜ் | |
3 | "சின்ன சின்ன" | பி. ௭ஸ். சசிரேகா, வித்யா | |
4 | "உச்சி மலை" | டி. எம். எஸ். பால்ராஜ் | |
5 | "நான் யென்ன சோல்லி" | பி. ௭ஸ். சசிரேகா, கே. ஆர். விஜயா | |
6 | "ஆசை மேலே ஆசை" | பி. ௭ஸ். சசிரேகா, ஏ. ஹரிஹரன் | |
7 | "அக்கா பசங்க" | டி. எம். எஸ். பால்ராஜ், டி. எல். மகராஜன் |
குறிப்புகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-25 அன்று பார்க்கப்பட்டது.