இணைந்த கைகள்
தோற்றம்
| இணைந்த கைகள் | |
|---|---|
| இயக்கம் | என். கே. விசுவநாதன் |
| தயாரிப்பு | ஆபாவாணன் |
| கதை | என். பிரசன்னகுமார் (வசனம்) |
| இசை | கியான் வர்மா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
| படத்தொகுப்பு | எஸ். அசோக் மேத்தா |
| கலையகம் | திரைச்சிற்பி |
| வெளியீடு | 2 ஆகத்து 1990 |
| ஓட்டம் | 160 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இணைந்த கைகள் (Inaindha Kaigal) 1990ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியவர் -என். கே. விசுவநாதன் . இதன் தயாரிப்பு மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆபாவாணன் ஆவார். கியான் வர்மா இசையமைக்க ஒளிப்பதிவினை என். கே. விசுவநாதன் செய்துள்ளார். இப்படத்தொகுப்பிளை அசோக் மேத்தா மேற்கொள்ள, இப்படம் 02 ஆகத்து 1990-ல் வெளியானது. 160 நிமிடங்கள் ஓடும் படம் . இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது .
கதாபாத்திரம்
[தொகு]- அருண்பாண்டியன்
- ராம்கி
- நிரோஷா
- சிந்து
- நாசர்
- செந்தில்
- ஸ்ரீவித்யா
- குள்ளமணி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை ஆபாவாணன் எழுதியிருந்தார்.[1][2]
| பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
|---|---|---|
| "ஆடி மாசம்" | கங்கை அமரன் | 2:23 |
| "அந்தி நேரத் தென்றல் காற்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ஜெயச்சந்திரன் | 4:29 |
| "சின்னபூவே சின்னபூவே" | தீபன் சக்ரவர்த்தி, வித்யா | 4:31 |
| "கங்கைக் கரையில்" | மலேசியா வாசுதேவன் | 4:59 |
| "மலையோரம் குயில்" | தீபன் சக்ரவர்த்தி, வித்யா | 4:28 |
| "ஒரச்ச மஞ்சளா" | ஆபாவாணன் | 2:48 |
| "மெல்ல மெல்ல" | வித்யா | 3:06 |
| "இது என்ன முதலிரவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா | 3:47 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Inaindha Kaikal". JioSaavn. January 1989. Archived from the original on 27 September 2022. Retrieved 2 January 2023.
- ↑ "Inaintha Kaigal Tamil Film LP vinyl Record Kyan Varma". Mossymart. Archived from the original on 2 January 2023. Retrieved 2 January 2023.
- http://www.imdb.com/title/tt0482677/
- http://www.jointscene.com/movies/kollywood/Inaindha_Kaigal/11192