உள்ளடக்கத்துக்குச் செல்

தீபன் சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபன் சக்ரவர்த்தி
இயற்பெயர்தீபன் சக்ரவர்த்தி
பிறப்பிடம்இந்தியா தமிழ்நாடு
இசை வடிவங்கள்திரைப்படப் பாடல்
தொழில்(கள்)பாடகர், பின்னணி பாடகர், நடிகர்
இசைத்துறையில்1974 -நடப்பு

தீபன் சக்ரவர்த்தி (Deepan Chakravarthy) இந்தியத் திரைப்படப் பின்னணி பாடகரும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகரான இசைத் தென்றல் திருச்சி லோகநாதனின் மகனாவார்.

இசைப்பயணம்

[தொகு]

தீபன் சக்ரவர்த்தி தன் இசைப்பயணத்தை 1974 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடிப் புகழ்பெற்றார். 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடுவதற்காக இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பாவினால் அறிமுகம் செய்யப்பட்டார். அதே ஆண்டு பொதிகை தொலைக்காட்சியிலும் தஞ்சை வாணன் அறிமுகம் செய்தார். 1978 ஆம் ஆண்டிலிருந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகள் சென்று பாடி வந்தார்.

நடிகராக

[தொகு]

தீபன் சக்கரவர்த்தி ஜி. என். ரங்கராஜன் இயக்கிய ராணித்தேனீ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஈரோடு முருகேஷ் இயக்கிய மாறுபட்ட கோணங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த வீரமும் ஈரமும் என்னும் தமிழ் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்[1].

தூர்தர்ஷனில் "எத்தனை மனிதர்கள்", சன் தொலைக்காட்சியின் மேகலா மற்றும் ராஜ் தொலைக்காட்சியின் ஆறு மனமே ஆறு போன்ற பல தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். இவர் சன் தொலைக்காட்சியின் "மகராசி" தொடரிலும் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

பாடிய சில தமிழ் பாடல்கள்

[தொகு]
திரைப்படம் பாடல் உடன் பாடியவர்(கள்) இசை பாடலாசிரியர் குறிப்புகள்
நிழல்கள் பூங்கதவே தாழ்திறவாய் உமா ரமணன் இளையராஜா கங்கை அமரன் முதற்பாடல்
௭ங்க ஊரு காவல்காரன் அரும்பாகி மொட்டாகி பி. சுசீலா இளையராஜா கங்கை அமரன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Plot without pep". The Hindu. 12 October 2007. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபன்_சக்ரவர்த்தி&oldid=3986978" இலிருந்து மீள்விக்கப்பட்டது