உள்ளடக்கத்துக்குச் செல்

பி. ஜெயச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஜெயச்சந்திரன்
P. Jayachandran
கொல்லத்தில் கச்சேரி ஒன்றில் பின்னணி பாடும் ஜெயச்சந்திரன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பாலியாத் ஜெயச்சந்திரகுட்டன்
பிறப்பு(1944-03-03)3 மார்ச்சு 1944
இரவிபுரம், கொச்சி, பிரித்தானிய இந்தியா (தற்போதைய இரவிபுரம், எர்ணாகுளம், கேரளம், இந்தியா)
இறப்பு9 சனவரி 2025(2025-01-09) (அகவை 80)
திருச்சூர், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்1965–2025
இணையதளம்www.jayachandransite.com

பி. ஜெயச்சந்திரன் (P. Jayachandran, மலையாளம்: : പി.ജയചന്ദ്ര൯, 3 மார்ச்சு 1944 – 9 சனவரி 2025)[1]) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் பாடியவர். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள அரசின் திரைப்பட விருதை நான்கு முறையும் பெற்றார். 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

ஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான இரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். அன்னையின் தூண்டலால் ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்களைப் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம், மெல்லிசை போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஒரு போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராகப் பரிசு பெற்றார். இதே போட்டியில் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சிறந்த செவ்விசைப் பாடகராகத் தேர்வு பெற்றார்.

விலங்கியலில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து சேர்ந்தார்.

திரை வாழ்வு

[தொகு]

1965 இல் இந்திய பாக்கித்தான் போர் நிதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர். எஸ். பிரபு ஆகியோர் ஜெயச்சந்திரனை அவர்களின் குஞ்சாலி மரக்கார் என்ற மலையாளப் படத்தில் பாட வைத்தார்கள். இப்படம் வெளிவரும் முன்னரே ஜெயச்சந்திரன் பாடிய களித்தோழன் படம் வெளி வந்தது. 1972ஆம் ஆண்டு "பணிதீராத வீடு" என்ற மலையாளத் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடிய நீலகிரியுடே என்ற பாடலுக்காக முதல் கேரள மாநில விருது பெற்றார்.1985ஆம் ஆண்டு "ஸ்ரீ நாராயண குரு" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் சிவசங்கர சர்வ சரண்ய விபோ, தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத் தந்தது. ஏ. ஆர். ரகுமான் இசையில் கிழக்குச்சீமையிலே படத்தில் அவரது பாடல் கத்தாழம் காட்டுவழி தமிழ்நாடு மாநில திரைப்படவிருது பெற்றது.

1975ஆம் ஆண்டு ஏ. ஆர். ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த "பெண்படா" என்ற மலையாளத் திரைப்படத்தில் வெள்ளி தேன் கிண்ணம் போல் என்ற இவரது பாடல், ஒன்பது வயதில் திலீப் சேகர் என்ற ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடலாகக் கருதப்படுகிறது.

  1. 1973ம் ஆண்டு வெளியான அலைகள் தமிழ் படத்தில் ""பொன்னென்ன பூவென்ன பெண்ணே..."" என்ற பாடலை எம் எஸ் வி இசையில் அறிமுகம்.[2]

இவர் பாடிய பாடல்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாடல். இசையமைப்பாளர்
1973 மணிப்பயல் தங்கச்சிமிழ் போல் ம. சு. விசுவநாதன்
1973 அலைகள் பொன்னென்ன பூவென்ன ம. சு. விசுவநாதன்
1974 நான் அவனில்லை மந்தார மலரே ம. சு. விசுவநாதன்
1976 மூன்று முடிச்சு வசந்தகால நதிகளிலே ம. சு. விசுவநாதன்
1978 கிழக்கே போகும் ரயில் மாஞ்சோலைக் கிளிதானோ இளையராஜா
காற்றினிலே வரும் கீதம் சித்திரச் செவ்வானம் இளையராஜா
ஒரு வானவில் இளையராஜா
ஆறிலிருந்து அறுபது வரை வாழ்க்கையே வேசம் இளையராஜா
1980 ஒரு தலை ராகம் கடவுள் வாழும் டி. ராஜேந்தர்
1981 கடல் மீன்கள் தாலாட்டுதே வானம் இளையராஜா
அந்த 7 நாட்கள் கவிதை அரங்கேறும் நேரம் ம. சு. விசுவநாதன்
தென்றலது உன்னிடத்தில்
இரயில் பயணங்களில் வசந்த காலங்கள் இசைந்து டி. ராஜேந்தர்
1983 சூரக்கோட்டை சிங்கக்குட்டி காளிதாசன் கண்ணதாசன் இளையராஜா
1984 அழகு மௌனமான மயக்கம் ஜி. கே. வெங்கடேசு
புதுமைப் பெண் காதல் மயக்கம் இளையராஜா
1985 பகல் நிலவு பூவிலே மேடை நான் இளையராஜா
பிள்ளைநிலா இராஜா மகள் ரோஜா மலர் இளையராஜா
நானே ராஜா நானே மந்திரி மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் இளையராஜா
நானே ராஜா நானே மந்திரி தேகம் சிறகடிக்கும் இளையராஜா
வைதேகி காத்திருந்தாள் காத்திருந்து காத்திருந்து இளையராஜா
வைதேகி காத்திருந்தாள் இராசாத்தி உன்ன இளையராஜா
வைதேகி காத்திருந்தாள் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இளையராஜா
1986 சம்சாரம் அது மின்சாரம் அழகிய அண்ணி சங்கர் கணேஷ்
அம்மன் கோவில் கிழக்காலே பூவ எடுத்து இளையராஜா
புன்னகை மன்னன் கவிதை கேளுங்கள் இளையராஜா
கடலோரக் கவிதைகள் கொடியிலே மல்லியப்பூ இளையராஜா
மனக்கணக்கு என் மணக்கூட்டு, சின்ன ம. சு. விசுவநாதன்
1987 பூ பூவா பூத்திருக்கு பூ பூத்த செடிய காணோம் டி. ராஜேந்தர்
சின்னபூவே மெல்லபேசு சின்னப்பூவே மெல்லபேசு எஸ். ஏ. ராஜ்குமார்
1988 செந்தூரப்பூவே சோதனை தீரவில்ல மனோஜ் கியான்
மனசுக்குள் மத்தாப்பு பூந்தென்றலே எஸ். ஏ. ராஜ்குமார்
சொல்ல துடிக்குது மனசு எனது விழி இளையராஜா
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி கங்கை அமரன்
1989 என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் புல்லைக் கூட பாட வைத்த இளையராஜா
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் பூ முடித்து பொட்டு வைத்த இளையராஜா
ராஜநடை கஸ்தூரி மான்குட்டியாம் ம. சு. விசுவநாதன்
1990 இணைந்த கைகள் "அந்திநேரத் தென்றல்" கியான் வர்மா
பச்சைக்கொடி "என்னவாது இந்த" கங்கை அமரன்
புதுப்பாடகன் "வாராயோ வந்த" கலைப்புலி எஸ் தாணு
புதுப்புது ராகங்கள் திருநாள் வந்ததடா எஸ். ஏ. ராஜ்குமார்
உறுதிமொழி "அதிகாலை நிலவே" இளையராஜா
1991 அர்ச்சனா ஐ. ஏ. எஸ். "நாலு வார்த்தை" எஸ். ஏ. ராஜ்குமார்
1992 தெய்வ வாக்கு "ஊரெல்லாம் சாமியாக" இளையராஜா
எல்லைச்சாமி "ஊமைக் குயில் ஒன்று" எஸ். ஏ. ராஜ்குமார்
இதுதாண்டா சட்டம் "அழகான பூந்தோட்டம்" எஸ். பி. வெங்கடேஷ்
பொண்டாட்டி ராஜ்ஜியம் "உச்சிமர பச்சக்கிளியே" தேவா
பொண்ணுக்கேத்த புருஷன் "தேவதை வந்தாள்" இளையராஜா
சோலையம்மா "மேற்குத் தொடர்ச்சி" தேவா
1993 கிழக்குச் சீமையிலே கத்தாழங் காட்டுவழி ஏ. ஆர். ரகுமான்
1994 காதலன் கொல்லையில தென்னை வைத்து ஏ. ஆர். ரகுமான்
அத்த மக ரத்தினமே அல்லி அல்லி தந்த நிலா கங்கை அமரன்
வண்டிச்சோலை சின்ராசு சித்திரை நிலவு ஏ. ஆர். ரகுமான்
மே மாதம் என்மேல் வீசும் ஏ. ஆர். ரகுமான்
தாய் மாமன் ஆழ சமுத்திரம் தேவா.
1995 பசும்பொன் அடி ஆத்தி நெஞ்சு வித்யாசாகர்
1996 பூவே உனக்காக சொல்லாமலே யார் பார்த்தது எஸ். ஏ. ராஜ்குமார்
1998 அவள் வருவாளா இது காதலின் சங்கீதம் எஸ். ஏ. ராஜ்குமார்
நிலாவே வா கடலம்மா வித்யாசாகர்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் கன்னத்தில் முத்தமிட்டால் ஏ. ஆர். ரகுமான்
சுந்தரா டிராவல்ஸ் மல்லிகைப் பூவுக்கு பரணி
சுந்தரா டிராவல்ஸ் நீ சந்தனம் பூசிய பரணி
பாபா இராஜ்யமா இல்லை ஏ. ஆர். ரகுமான்
2003 சொக்கத்தங்கம் வெள்ளையாய் மனம் தேவா
2004 எங்கள் அண்ணா கொஞ்சி கொஞ்சி பேசும் தேவா
2005 மீசை மாதவன் காபூலிவாலா நாடோடி பரணி
வெற்றிவேல் சக்திவேல் என் செல்லக் கண்ணம்மா ஸ்ரீகாந்த் தேவா
2007 கிரீடம் கனவெல்லாம் ஜி. வி. பிரகாஷ்குமார்
2018 அமுதா கண்ணாடி மலை அருண் கோபன்
2020 வன்முறை சின்ன பூ சன்னி விசுவநாத்

இறப்பு

[தொகு]

கேரள மாநிலம் திருச்சூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜெயச்சந்திரன் தனது 80-ஆவது அகவையில், 9 சனவரி 2025 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Playback singer P Jayachandran passes away". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 2025-01-09. Retrieved 2025-01-09.
  2. "First song of the legendary composer A.R.Rahman".
  3. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/malayalam-playback-singer-p-jayachandran-passes-away-in-thrissur-hospital/articleshow/117091525.cms

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜெயச்சந்திரன்&oldid=4186968" இலிருந்து மீள்விக்கப்பட்டது