உள்ளடக்கத்துக்குச் செல்

அருண் பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் பாண்டியன்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
11 மே 2011  11 மே 2016
முன்னையவர்எம். வி. ஆர். வீர கபிலன்
பின்னவர்எம். கோவிந்தராசு
தொகுதிபேராவூரணி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அருண் பாண்டியன் செல்லையா

13 சூலை 1958 (1958-07-13) (அகவை 67)
மட்டக்களப்பு, இலங்கை மேலாட்சி
துணைவர்விஜயா
பிள்ளைகள்கீர்த்தி பாண்டியனுடன் சேர்த்து மூன்று மகள்
உறவினர்ரம்யா பாண்டியன் (அண்ணன் மகள்), அசோக் செல்வன் (மருமகன்)
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி

அருண் பாண்டியன் (Arun Pandian) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை முன்னாள் இராணுவ வீரர்.[1] தமிழில் விகடன், போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கிய அருண்பாண்டியன் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2011-இல் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2][3][4][5] தென்னிந்தியத் திரைப்பட நிதியாளர் சங்கத்தின் (சிஃபா) செயலாளராகவும், தென்னிந்தியத் திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கத்தின் (சிஃபியா) தலைவராகவும் உள்ளார்.

அரசியல்

[தொகு]

அருண்பாண்டியன் 2011-இல் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) வேட்பாளராக பேராவூரணித் தொகுதியில் போட்டியிட்டபின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 பெப்ரவரி 21 அன்று அருண் பாண்டியனும், ஒன்பது சட்டமன்ற உறுப்பினரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இராஜினாமா செய்தனர். 2016 பெப்ரவரி 25 அன்று அ. தி. மு. க கட்சியின் பொதுச் செயலாளர், அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் (அஇஅதிமுக)வில் இணைந்தார்.

குடும்பமும், கல்வியும்

[தொகு]

அருண்பாண்டியன் ஓய்வு பெற்ற இளம் பேரரையர் டி. பி. செல்லையா என்பவரின் மகனாவார். தற்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். இவருடைய மறைந்த அண்ணன் சி. துரை பாண்டியன் இயக்கிய ஊழியன் திரைப்படத்தில் அருண் பாண்டியன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், கீர்த்தி பாண்டியன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அருண்பாண்டியன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் படித்தார். இவருடைய மகள் கீர்த்தி பாண்டியனும், இவருடைய அண்ணன் மகள் இரம்யா பாண்டியனும் நடிகையராகப் பணியாற்றி வருகின்றனர்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்குறிப்புகள்
1982 இளஞ்சோடிகள்
1985சிதம்பர ரகசியம்அருண்
1986ஊமை விழிகள்விஜய்
1987விலங்குபாபு
ஊர்க்குருவிவசந்த்
1990இணைந்த கைகள்மேஜர் டேவிட் குமார்
1991அதிகாரிதுரைப்பாண்டிகஸ்டம் ஆபிசர் என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1992கோட்டை வாசல்வேலு, செந்தூரப்பாண்டிஇரட்டை வேடம்
1993முற்றுகைபாலகிருஷ்ணன்இலட்சியம் என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1994ஊழியன்திலகன்இண்டியன் சிட்டிசன் என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1995அசுரன்டிஎஸ்பி பிரசாத்காமேண்டோ என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
ராஜ முத்திரைஇராஜ்குமார் ஐபிஎஸ்
1996தாயகம்பயில்வான்விருந்தினர் தோற்றம்
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேடிசிபி அந்தோனி ஐபிஎஸ்அதிகாரி என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
துறைமுகம்ஜானி
1997ரோஜா மலரேஅருண்
கடவுள்தமிழரசன்சக்தி என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1998ஆசை தம்பிவினோத்
உரிமைப் போர்ஏசிபி இராஜா யேசு முகமது
1999சிவன்ஏசிபி அலெக்ஸ் ஐபிஎஸ்
2000இண்டிபெண்டன்சு டேஎஸ்பி சுபாஷ் ஐபிஎஸ்
வீரநடைகோட்டைசாமி
புரட்சிக்காரன்அன்பு
2001ரிஷிசத்யன்
காற்றுக்கென்ன வேலிவிடுதலைப்புலிகளின் போர்வீரன்
2002தேவன்அலெக்ஸ் தேவன் (ஜாக்சன்)இயக்குநராகவும்
2003விகடன்ஆய்வாளர் செல்வக்குமார்இயக்குநராகவும்
2006திருப்பதிஏசிபி முரளி
கோவை பிரதர்ஸ்ஞானசேகரன்
2008இன்பாமல கணேசன்
மதுரை பொண்ணு சென்னை பையன்விசாவின் மாமா
2010தம்பி அர்ச்சுனாமுதலமைச்சர்
விருதகிரிபிராங்கிளின் வில்லியம்ஸ்
2015சவாலே சமாளிஅவராகவேகௌரவத் தோற்றம்
2021அன்பிற்கினியாள்சிவம்
2022ஆதார்யூசூப்
டிரிகர்எஸ்ஐ சத்தியமூர்த்தி
2024அதோமுகம்இந்திரஜித்
டிமாண்டி காலனி 2 இரிச்சர்ட்டு

தயாரிப்பாளராக

[தொகு]
ஆண்டுதிரைப்படம்மொழி
1988செந்தூரப்பூவேதமிழ்
1992காவியத் தலைவன்
2002தேவன்
2003விகடன்
2008ஏகன்
2009சர்வம்
பேராண்மை
வில்லு
2010அங்காடித் தெரு
நந்தலாலா
2012முரட்டுக் காளை
2015சவாலே சமாளி
2017களவாடிய பொழுதுகள்
2018ஜூங்கா
2021அன்பிற்கினியாள்

விநியோகஸ்தராக

[தொகு]

திரைக்கதை எழுத்தாளராக

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.elections.tn.gov.in/Affidavits/177/C.ARUNPANDIAN.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.jointscene.com/artists/Kollywood/Arun_Pandian/1643
  3. The Hindu : States / Tamil Nadu : Two more DMDK MLAs meet Jayalalithaa
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-01-14. Retrieved 2015-12-10.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2015-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_பாண்டியன்&oldid=4376551" இலிருந்து மீள்விக்கப்பட்டது