சினிமா எக்ஸ்பிரஸ்
வகை | திரைப்படச் செய்திகள் |
---|---|
இடைவெளி | மாதமிரு முறை |
தொடங்கப்பட்ட ஆண்டு | 1980 |
முதல் வெளியீடு | சனவரி 10, 1980 |
கடைசி வெளியீடு | 16 பெப்ரவரி 2016 |
நிறுவனம் | தி நியூ இந்தியன் எக்சுபிரசு |
நாடு | இந்தியா |
அமைவிடம் | சென்னை |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | www |
சினிமா எக்ஸ்பிரஸ் என்பது தமிழ்நாடு, சென்னையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ்ப் பொழுதுபோக்கு இதழாகும். இவ்விதழை தினமணி, கன்னடப் பிரபா போன்ற பிரபல பத்திரிகைகளை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்சுபிரசு குழுமம் வெளியிட்டு வந்தது. சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் ஆண்டுதோறும் தமிழ்த் திரைத்துறையில் பங்களிக்கும் சிறந்த கலைஞர்களுக்கு தேசிய விருதுகளுக்கு ஒப்பான வகையில் "சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை" வழங்கிக் கௌரவித்தது.[1][2] 1980 சனவரில் இருந்து வெளியான இவ்விதழ் 2016 பெப்ரவரி 16 இதழுடன் அச்சுப் பிரதி வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது.
வரலாறு
[தொகு]சினிமா எக்ஸ்பிரசு தனது முதலாவது இதழை 1980 சனவரி 10 இல் வெளியிட்டது. முதலாவது இதழை அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் வெளியிட்டார்.[3] இதன் முதலாவது ஆசிரியராக இராமமூர்த்தி பணியாற்றினார். இதன் ஆரம்ப விலை ரூ. 1.50 ஆக இருந்தது. இதன் கடைசி இதழ் 2016 பெப்ரவரி 16 இல் வெளிவந்தது. அப்போது அதன் விலை ரூ. 15.00 ஆகும்.[4] இதன் பின்னர் இதே பெயரில் இணைய வழியில் இந்தியன் எக்சுபிரசு குழுமத்தினர் வெளியிட்டு வருகின்றனர்.[5]
விருதுகள்
[தொகு]சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 1981 முதல் ஆண்டுதோறும் “சிறந்த திரைப்படம்”, “சிறந்த கதாசிரியர்”, “சிறந்த நடிக, நடிகையர்”, சிறந்த இயக்குனர்” போன்ற விருதுகளை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு வழங்கி வந்தது.[6][7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cinema Express awards presented". Indianexpress.com. 24 August 1998. http://archive.indianexpress.com/Storyold/112784/. பார்த்த நாள்: 4 October 2016.
- ↑ "Movies: Meena wins award for best actress". Rediff.com. 15 October 2001. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ "The New Indian Express Group shuts 36-year-old fortnightly Cinema Express". Business Standard. 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
- ↑ "Cinema Express" (in Tamil). The New Indian Express Group. 16 February 2016.
- ↑ https://www.facebook.com/pg/XpressCinema/about/?ref=page_internal
- ↑ "Cinema Express awards presented". Indianexpress.com. 1998-08-24. http://archive.indianexpress.com/Storyold/112784/. பார்த்த நாள்: 2011-07-14.
- ↑ "Movies: Meena wins award for best actress". Rediff.com. 2001-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-07-14.
- ↑ Express News Service (1989-03-11), "Cinema Express readers choose Agni Nakshathiram", இந்தியன் எக்சுபிரசு, p. 4, பார்க்கப்பட்ட நாள் 2016-10-03
- ↑ "1988 Award Winners" (in Tamil). Cinema Express-Indian Express Group. 1 May 1989.
வெளி இணைப்புகள்
[தொகு]- சினிமா எக்ஸ்பிரஸ் இணையதளம்
- Epaper பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம்