ஜெயா தொலைக்காட்சி
Jump to navigation
Jump to search
![]() | |
Country | இந்தியா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து |
---|---|
Launch date | ஆகத்து 1999 |
Official website | http://www.jayanetwork.in/ |
ஜெயா தொலைக்காட்சி என்பது இந்தியாவின் முதன்மையான தமிழ் மொழி செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றாகும். சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இத்தொலைக்காட்சி உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்து சென்ற துவக்க அலைவரிசைகளில் ஒன்றுமாகும். இத்தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெடுந்தொடர்கள் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து பார்வையாளர்களுக்காக தரிசனம் தொலைக்காட்சி மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
தொடர்ந்து பத்தாண்டுகளாக ஒளிபரப்பிவரும் தமிழ் அலைவரிசைகளில் ஜெயா தொலைக்காட்சி இரண்டாவதாகும். இதனுடைய நிகழ்ச்சிகளின் தரத்தினால் தொடர்ந்து விருதுகளை வாங்கி வருகிறது. ஜெயா பிளஸ், ஜெயா மாக்ஸ் என்ற சேவைகளைத் தொடங்கியுள்ளது. திசம்பர் 2010 முதல் ஒளித குறியீட்டை எம்பெக் 2 இலிருந்து எம்பெக் 4க்கு மாற்றிக் கொண்டுள்ளது.