ஏடிஎன் செயா தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏடிஎன் செயா தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 24 நவம்பர் 2000
உரிமையாளர் ஆசிய டெலிவிஷன் நெட்வொர்க்
நாடு கனடா
ஒளிபரப்பாகும் நாடுகள் கனடா
தலைமையகம் மார்க்கம், ஒன்றாரியோ
முன்பாக இருந்தப்பெயர் ஏடிஎன் தமிழ் தொலைக்காட்சி

ஏடிஎன் ஜெயா தொலைக்காட்சி என்பது 'ஆசிய தொலைக்காட்சி நெட்வொர்க்கிற்கு' சொந்தமான கனடா நாட்டில் இருக்கும் கனேடியத் தமிழர்களுக்கான 24 மணி நேரம் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை 30 ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு முதல் ஜெயா தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளையும், கனடிய உள்ளடக்கத்தையும் ஒளிபரப்புகிறது.

இந்த அலைவரிசை ஆரம்பத்தில் 'ஏடிஎன் தமிழ் தொலைக்காட்சி' என்றே ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஜெயா தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம் செய்து 'ஏடிஎன் ஜெயா தொலைக்காட்சி' என்று பெயர் மாற்றம் பெற்றது.

வரலாறு[தொகு]

ஏடிஎன் தமிழ் தொலைக்காட்சியின் சின்னம்

நவம்பர் 24, 2000 அன்று, ஏடிஎன்னுக்கு கனடிய வானொலி தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்திடமிருந்து 'ஏடிஎன் தமிழ் தொலைக்காட்சி' என்ற தொலைக்காட்சி அலைவரிசை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு தனது சேவையை ஒளிபரப்பு செய்தது.[1] பின்னர் ஆகஸ்ட் 30, 2013 அன்று ஜெயா தொலைக்காட்சியிடம் உரிமம் பெற்றும் வகை பி தமிழ் மொழி என்ற பிரிவின் கீழ் 'ஏடிஎன் ஜெயா தொலைக்காட்சி' என்ற பெயரில் ஒளிபரப்பு செய்து வருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]