டிஸ்கவரி கிட்சு இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிஸ்கவரி கிட்சு இந்தியா
ஒளிபரப்பு தொடக்கம் 7 ஆகஸ்ட் 2012
உரிமையாளர் டிஸ்கவரி ஆசியா-பசிபிக்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
கன்னடம்
மலையாளம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
இலங்கை[1]
வங்காளம்
நேபால்
பாக்கித்தான்
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
துணை அலைவரிசை(கள்) டிஸ்கவரி தமிழ்

டிஸ்கவரி கிட்சு இந்தியா என்பது 'டிஸ்கவரி ஆசியா-பசிபிக்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஆகஸ்ட் 7, 2012 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.[2]

வரலாறு[தொகு]

டிஸ்கவரி கிட்சு என்பது டிஸ்கவரி நெட்வொர்க்சு ஆசியா பசிபிக் என்ற நிறுவும் மூலம் இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் அலைவரிசையாக ஆகஸ்ட் 7, 2012 அன்று தொடங்கப்பட்டது.[3][4] ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. பின்னர் 2019 ஆண்டு முதல் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளும் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]