தமிழன் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழன் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் அக்டோபர் 14, 2002 (2002-10-14)
உரிமையாளர் திரு.கா.கலைக்கோட்டுதயம்
பட வடிவம் 576i (SDTV)
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
ஆசியா
தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலியா,
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் www.tamilantelevision.com

தமிழன் தொலைக்காட்சி என்பது ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி 2002, ஆகஸ்டு மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 2002 அக்டோபர் 14ஆம் நாள் சோதனை ஒளிப்பரப்பு தொடங்கப்பட்டது. 2003 பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் முதல் தொழில்முறை ஒளிப்பரப்பு தொடங்கியது. இது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் ஒளிபரப்பாகிறது. கலைக்கோட்டுதயம் தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனரும், மேலாண் இயக்குநரும் ஆவார்.

நிகழ்ச்சிகள்[தொகு]

நாள்தோறும் செய்திகள் காலை 8-30 மணிக்கும், பகல் 1-30 மணிக்கும், இரவு 8-30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. ஊர்தோறும் உள்ள குறைகளை களையும் நோக்கில் ‘நகர்வலம்’ எனும் சிறப்பு செய்தி நிகழ்ச்சி நாள்தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பு[தொகு]

இத்தொலைக்காட்சி இனசாட்-2ஈ செயற்கைகோள் வழியாக ஓளிபரப்பாகிறது. இணையதளம் வழியாக www.tamilantelevision.com ல் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழன்_தொலைக்காட்சி&oldid=2911015" இலிருந்து மீள்விக்கப்பட்டது