மின் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின் தொலைக்காட்சி, இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, வாடிபட்டி, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ் இணையதள தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். நிர்வாக அலுவலகத்தை சென்னையில் அமைத்துள்ள மின் தொலைக்காட்சி, மேப்-இந்தியா நெட்வொர்க்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் இணையதள தொலைக்காட்சி நிறுவனமாகும். கட்சி சார்பற்று பொதுமக்களின் ஆதரவில் இயங்கும் இந்த இணையதள தொலைக்காட்சி சமுதாய உணர்வு கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி தமிழகத்தின் பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் காத்து நேயர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தை இந்த மின் இணையதள தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.

மின் தொலைக்காட்சி தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல் தரணியெங்கும் தனது ஒளிபரப்பைத் துவக்க உள்ளது

மின் தொலைக்காட்சி இது ஒரு மேப்-இந்தியா நெட்வொர்க்ஸ் குழுமத்தின் ஓர் அங்கம்.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_தொலைக்காட்சி&oldid=3224767" இலிருந்து மீள்விக்கப்பட்டது