நேத்ரா தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நேத்ரா அடையாளச் சின்னம்

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசை (Channel Eye) சனவரி 1, 2008 ல் தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்கென நேத்ரா (Nethra) அலைவரிசை எனப் பெயர் மாற்றம் பெற்றது.

இது தனியொரு அலைவரிசை அல்ல. தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று ஆரம்பிக்கப்பட்டாலும் ஐ அலைவரிசையில் தமிழ்ச் செய்திகளும், தமிழ் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் நேரத்திற்கு மட்டும் நேத்ரா என்று பெயரிடப்படுகின்றது. அதாவது நேத்ரா என்ற பெயரில் குறிப்பிட்ட நேரங்களில் தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பாகின்றன.[1]

தொடர்ச்சியாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதில்லை. விளையாட்டு நிகழ்ச்சிகள், ஆங்கில செய்திகள் ஆங்கில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது ஐ அலைவரிசை (Channel Eye) எனும் பெயரில் ஒளிபரப்பாகும். எதிர் காலத்தில் சிங்கள நிகழ்ச்சிகளுக்கென ரூபவாகினியும், தமிழ் நிகழ்ச்சிகளுக்கென நேத்ராவும் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கென ஐ அலைவரிசையும் என மூன்று அலைவரிசைகள் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேத்ரா_தொலைக்காட்சி&oldid=2276738" இருந்து மீள்விக்கப்பட்டது