கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
கலர்ஸ்-தமிழ்.png
ஒளிபரப்பு தொடக்கம் 19 பிப்ரவரி 2018
உரிமையாளர் வயாகாம்-18
பட வடிவம் 576i SDTV
1080i HDTV
கொள்கைக்குரல் "இது நம்ம ஊரு கலரு"
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 778
டாட்டா ஸ்கை (இந்தியா) Channel 1555
சன் டைரக்ட் (இந்தியா) Channel 128
வீடியோகான் டி2எச் (இந்தியா) Channel 553
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 647
டிஷ் டிவி (இந்தியா) Channel 1808
மின் இணைப்பான்
அரசு டிஜிட்டல் (தமிழ்நாடு) Channel 108
டிசிசிஎல் (தமிழ்நாடு) Channel 4
எஸ்சிவி (தமிழ்நாடு) Channel 139

கலர்ஸ் தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் பிப்ரவரி 19, 2018 அன்று துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது.[2] மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.[3]

கலர்ஸ் தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார்.[4] Voot என்ற செயலி மூலமாக கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் திறன்பேசியில் காண முடியும்.[5]

நிகழ்ச்சிகள்[தொகு]

தமிழ்த் தொடர்கள்[தொகு]

பெயர் குறிப்பு கிழமை நேரம்
வேலுநாச்சி சிலம்பத்தில் தன்னுடைய தந்தை வழியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீரமிக்க பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு இளம்பெண்ணின் உத்வேகக் கதையாகும். திங்கள்-வெள்ளி 18:30
சிவகாமி ஒரு வெற்றிகரமான ஐ.பி.எஸ். அதிகாரியாக தன்னுடைய மகளை வளர்த்து உருவாக்குவதற்கு, சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஒரு இளம் பெண்ணின் வீரக் கதையாகும். திங்கள்-வெள்ளி 20:00
பேரழகி ஒரு பெரிய பிரபலம் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு இளம்பெண், அதற்கு தடையாக இருக்கும் அவளது தாழ்வு மனப்பான்மையை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதே இக்கதை ஆகும். திங்கள்-வெள்ளி 21:30

இந்தித் தொடர்கள்[தொகு]

பெயர் குறிப்பு கிழமை நேரம்
சக்கரவர்த்தி அசோகர் இந்தியாவில் மவுரிய வம்சத்தின் மூன்றாம் சக்கரவர்த்தியான அசோகரின் வாழ்க்கையைக் கூறும் ஒரு இந்திய வரலாற்றுத் தொடர். திங்கள்-வெள்ளி 12.00
நாகினி-2 தன் தாயைக் கொன்ற எட்டு பேரைப் பழிவாங்கப் போராடும் ஷிவாணி என்ற இச்சாதாரி நாகினியின் கதையைக் கூறும் ஒரு கற்பனைத் தொடர். திங்கள்-வெள்ளி 19:00
காக்கும் தெய்வம் காளி இந்துக் கடவுளான பார்வதி தேவியின் அம்சமும் உக்கிர தெய்வமுமான மகாகாளியின் கதையைக் கூறும் ஒரு பக்திக் தொடர். சனி-ஞாயிறு 20:00

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்[தொகு]

பெயர் குறிப்பு கிழமை நேரம்
எங்க வீட்டு மாப்பிள்ளை நடிகர் ஆர்யா 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு புதுமையான உண்மை நிகழ்ச்சி. இதை நடிகை சங்கீதா க்ரிஷ் தொகுத்து வழங்குகிறார். திங்கள்-வெள்ளி 19:00
கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் பொழுதுபோக்கு சார்ந்த உண்மை நிகழ்ச்சி. இதை நடிகர் சிவா தொகுத்து வழங்குகிறார். சனி-ஞாயிறு 20:00

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]