உள்ளடக்கத்துக்குச் செல்

சோனி டென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனி டென்
ஒளிபரப்பு தொடக்கம் 1 ஏப்ரல் 2002
வலையமைப்பு சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
உரிமையாளர் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
மலையாளம்
வங்காளம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
இலங்கை
வங்காளம்
நேபால்
மாலைத்தீவுகள்
தெற்கு ஆசியா
ஆப்கானித்தான்
பூட்டான்
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம்
வலைத்தளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

சோனி டென் என்பது சோனி பிக்சர்சு நெட்வொர்க்சு இந்தியாவுக்குச் சொந்தமான இந்திய கட்டணத் தொலைக்காட்சி உடல் திறன் விளையாட்டு தொலைக்காட்சி அலைவரிசை சேவை ஆகும். இது துடுப்பாட்டம், கால்பந்து, கூடைப்பந்தாட்டம், தட்டுப்பந்து, மற்றும் மற்போர் போன்ற விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புகிறது. இது சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்சு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும்.

இந்த அலைவரிசை ஏப்ரல் 1, 2002 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமயிடமாகக் கொண்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம், வங்காளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.

வரலாறு

[தொகு]

சனவரி 2001 இல் தாஜ் தொலைக்காட்சி துபாயில் உருவாக்கப்பட்டது.பின்னர் இந்த நிறுவனம் ஏப்ரல் 1, 2002 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானில் டென் இசுபோர்ட்சு என்ற அலைவரிசையை அறிமுகப்படுத்தியது.

2006 ஆம் ஆண்டில் எஸ்செல் குழுமம் டென் இசுபோர்ட்சு அலைவரிசையை வாங்கி அதன் ஜீ குழுமத்தின் ஒரு பகுதியாக மாற்றியது.[1] இருப்பினும் பாகிஸ்தானில் உள்ள டென் இசுபோர்ட்சு அலைவரிசை எஸ்செல் குழுமத்தின் துணை நிறுவனமான டவர் டூ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2016 இல், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்சு இந்தியா அனைத்து விளையாட்டு அலைவரிசைகளையும் ஜீ குழுமத்திலிருந்து வாங்கியது.[2] ஜூலை 18, 2017 அன்று தனது உயர் வரையறு தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியதோடு விளையாட்டு அலைவரிசைகள் அனைத்தும் "சோனி" அங்கித்துக்குள் இணைக்கப்பட்டு, சோனி நிறுவனத்தின் கீழ் அலைவரிசைகள் மறுபெயரிடப்பட்டன.[3]

சோனி டென் 4 என்ற அலைவரிசை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துடுப்பாட்டம், கால்பந்து, கூடைப்பந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் கலவையை ஒளிபரப்புவதற்காக ஜூன் 1, 2021 அன்று தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Correspondent, Our (2020-07-23). "Indian monopoly over Pakistan Cricket broadcast rights". ScoreLine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
  2. Menon, Bindu. "Sony Pictures acquires Ten Sports for $385 m". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  3. "Sony rebrands sports business; launches 2 new HD channels". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/media/entertainment/media/sony-rebrands-sports-business-launches-2-new-hd-channels/articleshow/59651869.cms?from=mdr. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_டென்&oldid=3310407" இலிருந்து மீள்விக்கப்பட்டது