சன் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சன் செய்திகள்
சன் செய்திகள் சின்னம்
உரிமையாளர் சன் குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 913

சன் செய்திகள் (ஆங்கிலம்: Sun News) எனப்படுவது சன் குழுமத்தால் நடத்தப்படும் 24 மணி நேரச் செய்தி அலைவரிசையாகும்.[1] சன் செய்திகள் அலைவரிசையானது ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென் ஆபிரிக்கா, அவுசுதிரேலியா, நியூசிலாந்து ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக, 27 நாடுகளில் பார்க்கப்பட்டு வருகின்றது.

ஆரம்பம்[தொகு]

சன் செய்திகள் அலைவரிசையானது 2000ஆம் ஆண்டு ஏப்பிரல் 14ஆம் திகதி தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பித்து வைத்தார். இதன் செய்தி ஆசிரியராக தற்போது தமிழ்நாட்டின் தலைசிறந்த விவாத நெறியாள்கையாளரும் ஊடகவியலாளருமான மு. குணசேகரன் பொறுப்பேற்றுள்ளார்.

நிகழ்ச்சிகள்[தொகு]

  • தமிழகம்
  • வண்ணத்திரை
  • நேருக்கு நேர்
  • வணிகச் செய்திகள்
  • ஆலோசனை நேரம்
  • மங்கையர் சாய்ஸ்
  • 1 மணித்தியாலச் செய்திகள்[2]
  • நிஜம்

முதலிய நிகழ்ச்சிகள் சன் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_செய்திகள்&oldid=3032873" இருந்து மீள்விக்கப்பட்டது