சன் நெக்ட்ஸ்
தலைமையிடம் | சென்னை, தமிழ்நாடு ஹைதராபாத், தெலுங்கானா |
---|---|
சேவை பகுதி | |
தொழில் | மகிழ்கலை, மக்கள் ஊடகம் |
உரிமையாளர் | சன் டிவி நெட்வொர்க் (சன் குழுமம்) |
வலைத்தளம் | www |
வலைத்தள வகை | OTT Platform ஊடக ஓடை கோரிய நேரத்து ஒளிதம் |
பதிகை | தேவை |
பதிந்த பயனர்கள் | 20 - 25 மில்லியன் |
மொழிகள் | தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் வங்காளம் |
துவக்கம் | ஜூன் 2017 |
தற்போதைய நிலை | செயலில் |
[1][2] |
சன் நெக்ட்ஸ் என்பது சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தால் நடத்தும் ஒரு கோரிய நேரத்து ஒளித சேவையாகும். இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் போன்ற ஐந்து மொழிகளில் உள்ளடக்கத்துடன் ஜூன் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.[3][4] சன் நெக்ட்ஸ் வலை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் நவீன தொலைக்காட்சி சாதனங்களில் கிடைக்கிறது.
வரலாறு
[தொகு]இந்த சேவை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் போன்ற மொழிகளின் உள்ளடக்கத்துடன் ஜூன் 2017 இல் தொடங்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு நாட்களுக்குள், 1.1 மில்லியன் மக்களால் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. நவம்பர் மாதத்திற்குள் அது ஏழு மில்லியனாக இருந்தது.[5] ஆகஸ்ட் 2019 இல் சன் டிவி நெட்வொர்க் 18 மாதங்களில் ₹150 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டது.[6]
பிப்ரவரி 2020 இல் தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 15 மில்லியன் பயனர்களாக வளர்ந்து லாபம் ஈட்டத் தொடங்கியது.[7] ஆனால் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 20 மில்லியன் சந்தாதார்களை கொள்வது என்பது இவர்களின் இலக்காக இருந்தது.[8]
உள்ளடக்கம்
[தொகு]சன் நெக்ட்ஸ் ஆரம்பிக்கும்போது 4000 திரைப்படங்கள் மற்றும் 40 அலைவரிசைகளுடன் நான்கு மொழிகளில் ஆரம்பிக்கட்டது.[9] அலைவரிசைகள் மற்றும் திரைப்படங்கள் தவிர செய்திகள், நாடகத் தொடர்கள், நகைச்சுவை காட்சிகள், நிகழ்ச்சிகள் மாற்றம் பாடல்கள் என பல வகையான பொழுது போக்கு அம்சங்களை கொண்டுள்ளது.[10] பிப்ரவரி 2020 நிலவரப்படி, இத் தளத்தில் 390 நிகழ்ச்சிகளையும் 4087 திரைப்படங்களையும் இருக்கின்றன.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All TV Channels | KTV Channel Online | Live All TV Channels Online". www.sunnxt.com. Retrieved 2020-03-09.
- ↑ "Sun TV Network's OTT platform Sun NXT turns profitable, subs base grows to 15 mn" (in en-US). 2020-02-17. https://www.televisionpost.com/sun-tv-networks-ott-platform-sun-nxt-turns-profitable-subs-base-grows-to-15-mn/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ PTI. "Sun TV Networks launches multilingual digital platform". @businessline (in ஆங்கிலம்). Retrieved 2020-03-09.
- ↑ "Sun TV launches subscription VoD service Sun NXT". MediaNama (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-06-13. Retrieved 2020-03-09.
- ↑ "From VOOT to Viu, Sun NXT to Hoichoi, OTT platforms are offering a bounty of regional content- Entertainment News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2017-11-01. Retrieved 2020-03-09.
- ↑ Babu, Gireesh (2019-08-11). "Sun TV Network plans to invest Rs 150 crore into OTT content platform". Business Standard India. https://www.business-standard.com/article/entertainment/sun-tv-network-plans-to-invest-rs-150-crore-into-ott-content-platform-119081100319_1.html.
- ↑ "Sun TV Network's OTT platform Sun NXT turns profitable, subs base grows to 15 mn". TelevisionPost: Latest News, India’s Television, Cable, DTH, TRAI (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-17. Retrieved 2020-03-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Babu, Gireesh (2019-11-20). "Sun TV expects OTT 20 million subscribers by year end as ad revenue dips". Business Standard India. https://www.business-standard.com/article/companies/sun-tv-expects-ott-20-million-subscribers-by-year-end-as-ad-revenue-dips-119112000661_1.html.
- ↑ Narasimhan, T. E. (2017-06-16). "Sun TV's digital platform Sun NXT can be viewed across screen formats". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/sun-tv-s-digital-platform-sun-nxt-can-be-viewed-across-screen-formats-117061600358_1.html.
- ↑ "Sun TV Network launches digital content platform, Sun NXT - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). Retrieved 2020-03-09.
- ↑ "Netflix is losing to homegrown OTT players in India — as the country remains addicted to soaps and movies". Business Insider. Retrieved 2020-03-09.