ஊடக ஓடை
ஊடக ஓடை (Streaming media) என்பது ஓர் ஓடை வழங்கியின் வினியோகத்தை தொடர்ந்து வாங்கி அதனை பயனருக்கு வழங்கிடும் பல்லூடகம் ஆகும். இதன்மூலம் முழுமையான கோப்பு வந்தடையும் முன்னரே பயனர் உலாவி அல்லது உட்செருகு (plug-in) தரவுகளை வெளிப்படுத்த இயலும்.[1] இங்கு எவ்வகையான ஊடகம் என்பதைவிட அது எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும். தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் பரப்பப்படும் ஊடகங்களுக்கே இது பொருந்தும். மற்ற வினியோக முறைகளில் சில தம் பண்பாகவே தொடர்ந்து வெளிப்படுத்தப்படுபவை (வானொலி, தொலைக்காட்சி) அல்லது தம் பண்பாக ஓடையாக்க முடியாதவை (நூல்கள், காணொளி அல்லது ஒலி நாடா/வட்டுகள்). இணையத் தொலைக்காட்சி ஓர் வழமையான ஊடக ஓடையாகும். ஒளிதம் அல்லது ஒலிபரப்பின்றியும் ஊடக ஓடை இருக்கலாம். நிகழ்நேர உரை, உடனடி தலைப்பிடுதல் மற்றும் பங்கு டிக்கர் என்பன உரை ஓடைக்கான காட்டுகளாகும்.
நேரலை ஊடக ஓடை என்பது நிகழ்நேரத்தில் இணையம் வழியே பரப்பப்படுவதாகும்; இதற்கு ஒளிபிடி கருவியும் எண்மிய ஓடையாக்க ஓர் குறிமாற்றியும் ஊடக பதிப்பாளியும் தரவுகளை பல்வேறு இடங்களில் பரப்பி வழங்கிட ஓர் தரவு வழங்கல் பிணையமும் தேவை.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ இங்கு "வெளிப்படுத்தபடும்" என்ற சொல் பொதுவான பயன்பாடாக ஒலி அல்லது ஒளி காட்சிப்படுத்தலைக் குறிக்கிறது.
மேலும் அறிய
[தொகு]- J. Preston. "Occupy Video Showcases Live Streaming," New York Times, December 11, 2011