ஐரூன்சு கடை
![]() | |
வகை | எண்ணிம விநியோகம், எண்ணிம மியூசிக் ஸ்டோர், கோரிய நேரத்து ஒளிதம், ஆப் ஸ்டோர் (ஆப் ஸ்டோர் (ஐஓஎஸ்/ஐபாட் ஓஎஸ்), மின்னூல் (ஆப்பிள் புக்ஸ்) |
---|---|
வெளியீட்டு நாள் | ஏப்ரல் 28, 2003 |
தளங்கள் | மேக் ஓஎஸ், ஐஓஎஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு, டிவிஓஎஸ் |
வலைத்தளம் | apple |
ஐரூன்சு கடை அல்லது ஐரூன்சு இசுடோர் (ஐடியூன்ஸ் ஸ்டோர், iTunes Store) என்பது ஆப்பிள் நிறுவனத்தின் எண்ணிம ஊடகக் கடை ஆகும். இது ஏப்ரல் 28, 2003 அன்று ஸ்டீவ் ஜொப்ஸ் என்பவரால் இசைக்கான எண்ணிம சந்தையைபடுத்தும் நோக்கத்துடன் திறக்கப்பட்டு எண்ணிம தனிப்பாட்டுக்களை விற்பனைசெய்வதில் முன்னிலையில் உள்ளது. ஏப்ரல் 2020 நிலவரப்படி, ஐடியூன்ஸ் 60 மில்லியன் பாடல்கள், 2.2 மில்லியன் பயன்பாடுகள், 25,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் 65,000 படங்களை வழங்குகிறது.[1] ஜூன் 2013 நிலவரப்படி, ஐடியூன்ஸ் ஸ்டோர் 575 மில்லியன் செயலில் உள்ள பயனர் கணக்குகளைக் கொண்டுள்ளது[2] மற்றும் 315 மில்லியனுக்கும் அதிகமான கைபேசி சாதனங்களுக்கு சேவை செய்துள்ளது.[3]
ஐ-டியூன்ஸ் ஸ்டோர் மக்கின்டொஷ் (மியூசிக் பயன்பாட்டின் உள்ளே), ஐ-போன், ஐ-பேடு, ஐ-பேடு டச் மற்றும் ஆப்பிள் டிவி மற்றும் விண்டோசு (ஐடியூன்ஸ் உள்ளே) உள்ளிட்ட பெரும்பாலான ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கிறது. ஐ-டியூன்ஸ் ஸ்டோரிலிருந்து காணொளிகளை வாங்குதல் ஆப்பிள் டிவி பயன்பாட்டில் உள்ள ரோகு[4] மற்றும் அமேசான் ஃபயர் டிவி சாதனங்கள் மற்றும் சில நவீன தொலைக்காட்சிகளில் காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Langer, Andy (September 10, 2014). "Is Steve Jobs the God of Music?". Esquire. Hearst Communications. July 10, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The algebra of iTunes". CNN. June 15, 2013. June 21, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 17, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "iPhone 5 announcement: 3 important things to watch". NineMSN.com.au. September 12, 2012. September 14, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜூன் 15, 2021 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "Apple TV is now available on the Roku platform". Roku, Inc. 2019-10-15. 2020-02-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kastrenakes, Jacob. "Apple TV app launches on Amazon Fire TV devices". The Verge. Vox Media.