ஐ-போன்
ஐ-போன் 15 | |
தயாரிப்பாளர் | ஆப்பிள் |
---|---|
கேமரா | 2.0 மெகாபிக்சல் |
இயங்கு தளம் | ஐ-போன் ஓ-எசு 2.2.1 (புல்ட் 5H11) |
உள்ளீடு | Dock connector · Headphone jack · ஒய்-ஃபை (802.11b/g) · புளூடூத் 2.0+EDR |
நினைவகம் | 128 எம்.பி டி ரேம் |
பதிவகம் | பிளாஷ் நினைவகம் (அசல்: 4, 8, & 16 கிகாபைட்டு; 3ஜி: 8 & 16 GB) |
தொடர்பாற்றல் | குவாட் பேண்ட் 3ஜி தொழில்நுட்ப வசதி |
ஐ-போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் நகர்பேசி இயங்குதளத்தால் செயல்படுகிறது. இந்த நகர்பேசி தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது.முதல் தலைமுறை ஐபோன் ஜூன் 29, 2007 அன்று வெளியிடப்பட்டது; மிக சமீபத்திய ஐபோன்கள், எட்டாவது தலைமுறை ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளசு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் எனும் விவேகக் கைபேசியை உருவாக்கியது ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் இயங்கும் ஆப்பிள் கம்யுட்டர் நிறுவனம். ஐபோன் பிறப்புக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஸ்டீவ் ஓஜினியக், ரோனால்ட் வேன் எனும் கணினி வல்லுநர்களும் பெரும் பங்காற்றி உள்ளனர்.[1]
அளவு மற்றும் எடை
[தொகு]- நீளம் :2.4 அங்குலம் அகலம் : 4.8 inch
- உயரம்:4.5 அங்குலம்
- எடை: 133 கிராம்
- திரையுன் அகலம் - 3.5 Inch
- சேமிக்கும் திறன் - 8GB,16GB மற்றும் 32 GB
- இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் : Wi-Fi
செயற்கூறுகள்
[தொகு]3 G
[தொகு]3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமாக 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15 MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும். குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும். இதனால் தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப என நாம் எங்கும் சென்றுகொண்டிருக்கும் போதே செய்ய இயலும்.
அசிலரோமீட்டர் (அசைவுணர் மானி)
[தொகு]இது நீங்கள் ஐபோனை செங்குத்தாக இருந்து சாய்வாக மாற்றும் போது படங்களை நீங்கள் திருப்பிய வண்ணம் மாற்றி காண்பிக்கும் திறன் கொண்டது.
ஒளி உணரி
[தொகு]நீங்கள் வெளிச்சம் குறைவான இடத்தில் இருக்கும் போது ஐபோனை உபயோகிக்கும் போது இதன் திரை அதிக வெளிச்சத்துடன் தெளிவாக பார்க்கும் வகையில் மாறிக்கொள்ளும். அதே போல அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றார் போல திரை மாறிவிடும்.
தூர உணரி
[தொகு]ஒரு அழைப்பை ஏற்படுத்திவிட்டு உங்கள் காதின் அருகில் கொண்டு செல்லும் போது இதன் திரை தானாக ஆப் ஆகிவிடும், இது பவரை குறைக்க உதவும் விதமாக அமைந்துள்ளது.
இதர அம்சங்கள்
[தொகு]- இது 4G, 3G திறன் கொண்ட நகர் பேசி.
- அதிவேக இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் திறன்
- மிக அகலமான திரை மூலமாக நிகழ்படங்களை தெளிவாக காணும் வசதி
- விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
- Pdf, Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
- விமானம் ஏறியதும் கம்பியற்ற வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
- கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
- புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
குறைகள்
[தொகு]- ஆப்பிள் நிறுவன் மென்பொருள் அல்லாத மற்ற மென்பொருட்களை ஏற்றி பயன்படுத்த இயலாது.