ஒளிப்படக்கருவி
(படம்பிடிகருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒளிப்படக்கருவி அல்லது நிழற்பட ஒளிவாங்கி,படமி(சுருக்கம் : ஒளிவாங்கி அல்லது 'நி' னா வாங்கி ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும்.
ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், நிழற்படக் கருவிகள் (photo cameras) அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (still cameras) எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் ஒளியைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.