மின்னூல்
மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும்.
மின்னூலானது பொதுவாக பதிப்பாளர்களால், மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் தமது புத்தகங்களை விநியோகிப்பதற்காக உருவாக்கப்படுகிறது.
இவை வெற்று உரை வடிவமாகவோ, நூல் சம்பந்தப்பட்ட சிறப்பு தகவல்களை தம்மகத்தே கொண்டவையாகவோ இருக்கும்.
வடிவங்கள்
[தொகு]மின்னூல் சமுதாயமானது ஏகப்பட்ட மின்னூல் வடிவத் தெரிவுகளை கொண்டிருக்கிறது. எந்தவடிவம் சிறந்தது, வடிவங்களிலுள்ள குறைபாடுகள் எவை, நிறைகள் எவை என்பதுபற்றியெல்லாம் ஏகப்பட்ட விவாதங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளது.
எவ்வாறாயினும், கடைக்கோடிப்பயனாளரைப் பொறுத்தவரையில் புத்தகத்தை படிக்கவேண்டும் என்பதே முதன்மையான தேவையாகும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு மின்னூல் வடிவங்களும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளையும் போதாமைகளையும் கொண்டிருக்கின்றன.
பிம்பக் கோப்புகள்
[தொகு]பிம்ப (பட) கோப்புத்தொடர்கள் மூலம் மின்னூல் ஒன்று உருவாக்கப்படலாம். எத்தகைய பிம்பக்கோப்பு வடிவமும் இதற்கென பயன்படுத்தப்படலாம். இவ்வாறாக உருவாக்கப்படும் மின்னூல்கள் ஏனைய வடிவங்களை விட அதிக மின்கனத்தை கொண்டிருக்கும். அத்தோடு பயனர் அதன் உரைப்பகுதியினை தெரிவுசெய்ய, நகலெடுத்து வேறிடத்தில் உரையாக பயன்படுத்த முடியாது. உரத்துப்படிக்கும் செயலிகள் இதனை படிக்க முடியாது.
இத்தகைய மின்னூல் வடிவங்கள் சித்திரக் கதை நூல்களுக்கே மிக பொருத்தமானதாகும்.
செழிய உரை வடிவம் (rich text format)
[தொகு]இது, நிறம், தடிப்பு, எழுத்துரு போன்ற உரை வடிவமைப்பு தகவல்களை தன்னகத்தே கொண்ட கோப்பமைப்பாகும்.
மீயுரை குறியீட்டு மொழி (Hyper Text Markup Language)
[தொகு]இது பொதுவில் HTML என அழைக்கப்படுகிறது.
உரையின் செழிய வடிவமைப்புக்கள், பிம்பங்கள் , தொடுப்புக்கள் போன்ற பல தகவல்களை இவ்வடிவத்தில் உள்ளடக்கலாம். இவ்வடிவமைப்பிலுள்ள மின்னூல் ஒன்றினை படிக்க சாதாரண வலை உலாவி ஒன்றே போதுமானது. சிறப்பான செயலிகள் எதுவும் தேவைப்படாது.
அச்சில் வெளிவரும் நூல்களுடனான ஒப்பீடு
[தொகு]நற்பயன்கள்
[தொகு]- உரை தேடலுக்குள்ளாக்கப்படமுடியும். பிம்ப வடிவத்திலிருந்தால் முடியாது..
- சின்னஞ்சிறிய இடத்தையே பிடித்துக்கொள்ளும்.
- பல்லாயிரக்கணக்கான மின்னுற்களை ஒரு சாதனத்தில் கொண்டு சென்றுவிடலாம்