ஊட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊட்
Voot website logo.png
நிறுவன_வகைகிளை நிறுவனம்
தலைமையிடம்மும்பை, இந்தியா
சேவை பகுதிஇந்தியா
தொழில்
பண்டங்கள்
சேவைகள்
  • திரைப்படத் தயாரிப்பு
  • திரைப்பட விநியோகம்
  • சின்னத்திரை தயாரிப்பு
உரிமையாளர்வையகாம் 18
வலைத்தளம்www.voot.com
பதிகைபயனர் விருப்பம்
பதிந்த பயனர்கள்Green Arrow Up Darker.svg மார்ச் 12 2021 இன் படி 10 லட்சம் சந்தாதாரர்கள் [1]
ஒரு கோடி மாத பயனர்கள் [2]
மொழிகள்இந்தி
ஆங்கிலம்
கன்னடம்
குஜராத்தி
மராத்தி
வங்காளி
தமிழ்
தெலுங்கு
துவக்கம்26 மார்ச்சு 2016; 5 ஆண்டுகள் முன்னர் (2016-03-26)
தற்போதைய நிலைஇயக்கம்

ஊட் என்பது இந்தியாவைச் சேர்ந்த சந்தா வாரியான கோரிய நேரத்து காணொலி வழங்கும் கட்டணச் சேவை ஆகும். வையகாம் 18 என்னும் ஊடக நிறுவனத்தின் இயங்கலை கரம் இதுவாகும். மார்ச்சு 2016 இல் இச்சேவை தோற்றுவிக்கப்பட்டது.[3]

நிகழ்ச்சிகள்[தொகு]

வையகாம் 18 நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஊட்டில் எப்போது வேண்டுமானாலும் தரவு பயன்பாட்டுடன் காணமுடியும். நிக்கலோடியன், எம்டிவி, கலர்ஸ் குழுமம் உள்ளிட்டவை வையகாம் நிறுவனத்திற்கு சொந்ததானவை.[4]

இவ்வலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் அத்தனை நிகழ்ச்சிகள், தொடர்கள், அசைவூட்டங்கள் அனைத்தையும் ஊட்டில் காண முடியும். 40,000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட உள்ளடகத்தைக் கொண்டது ஊட்.

ஒளிபரப்பிடம்[தொகு]

ஊட் இந்தியாவில் மட்டுமே முழுமையாக இயங்குகிறது. இதைத் தவிர்த்து விர்ஜின் மீடியா என்கிற கம்பிவட நிறுவனத்தின் மூலம் ஐக்கிய இராச்சியத்திலும் ஸ்லிங் டிவி என்னும் நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்காவிலும் ஊட்டின் நிகழ்ச்சிகளைக் காணமுடியும்.

ஊட் செலக்ட்[தொகு]

பெப்ரவரி 2020 இல் ஊட் செலக்ட் என்கிற கட்டணச் சேவையை ஊட் அறிமுகப்படுத்தியது. விளம்பரமற்று காண்கை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே காண்கை, ஊட்டால் தயாரிக்கப்படும் பிரத்யேகமான நிகழ்ச்சிகளைக் காண்கை ஆகியவை இந்த சேவையின் கூறுகள் ஆகும். பயனர் விருப்பத்தின் பெயரில் இது இயங்குகிறதே தவிர கட்டாயம் இல்லை.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்&oldid=3170437" இருந்து மீள்விக்கப்பட்டது