ஆப்பிள் டிவி+
![]() | |
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
வெளியீட்டு நாள் | நவம்பர் 1, 2019[1] |
உறுப்பினர்கள் | ![]() |
வலைத்தளம் | apple.com/apple-tv-plus/ |
ஆப்பிள் டிவி+ என்பது நவம்பர் 1, 2019 அன்று ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட விளம்பரம் இல்லா சந்தா அடிப்படையிலான கோரிய நேரத்து காணொலிகளை ஒளிபரப்பும் ஒரு மேலதிக ஊடக சேவையாகும்.[2]
தளங்கள்[தொகு]
ஆப்பிள் டிவியின் நிகழ்ச்சிகளை சந்தா செலுத்தப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவன சாதனங்களில் மட்டும் அல்லாது விண்டோஸ், ஆண்ட்ராய்டு, குரோம் ஓயெஸ் உள்ளிட்ட தளங்களின் அடிப்படையிலான சாதனங்களிலும் காண முடியும்.[3][4]
சுமார் நூற்றி ஐம்பது நாடுகளில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நூறு நாடுகளில் ஆப்பிளின் நிகழ்ச்சிகளைக் காண முடியும்.[5][6]
நிகழ்ச்சிகள்[தொகு]
ஆப்பிள் டிவியின் அறிமுக விழாவில் ஆங்கிலத் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் மிகப்பெரிய வரவு செலவு கணக்கு ஒதுக்கி, ஆகச்சிறந்த நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மகிழ்கலை கலைஞர்களை வைத்து தாங்கள் நிகழ்ச்சிகளை உருவாக்குவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.[7]
மார்ச்சு 2020 இல் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்தது.[8] இதனால் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட பழைய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை அந்நிறுவனம் பிற நிறுவனங்களிடம் இருந்து மிகுதியான தொகைக்கு வாங்கியது. பிப்ரவரி 2021 முதல் மீண்டும் தனது நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பைத் துவங்கியது ஆப்பிள்.[9][10][11]
வரவேற்பு[தொகு]
டிஸ்னி பிளஸ், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் டிவிக்கு குறைவான வரவேற்பே கிடைத்துள்ளது என்பது 2020 இன் முதல் ஆறு மாத தரவறிக்கைகளின் அடிப்படையில் தெளிவானது. இதையடுத்து ஆப்பிள் ஒன் என்கிற கூட்டுச் சந்தா சேவையை ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. இந்த கூட்டுச் சந்தா சேவையின் மூலம் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் கிளவுட் உள்ளிட்ட கூடுதல் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.[12][13][14][15]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Apple Targets Apple TV+ Launch in November, Weighs $9.99 Price After Free Trial". August 19, 2019. https://www.bloomberg.com/news/articles/2019-08-19/apple-is-targeting-launch-of-apple-video-service-by-november.
- ↑ "ஆப்பிள் டிவி+ நிகழ்ச்சிகள் - எஸ்கொயர்".
- ↑ "ஆண்ட்ராய்டில் ஆப்பிள் டிவி - 9டூவகூகுள்".
- ↑ "ஆப்பிள் ப்ளஸ் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது - ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி".
- ↑ "நவம்பரில் ஆப்பிள் ப்ளஸ் - ஸ்லாஷ் ஃபிலிம்".
- ↑ "ஆப்பிள் டிவி வெளியீட்டு தேதி - புளூம்பெர்க்".
- ↑ "ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம் - லாஸ் ஏஞ்சலஸ் நாளிதழ் லமக்".
- ↑ "ஆப்பிள் டிவி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு இரத்து - மேக்ரூமர்ஸ்".
- ↑ "தனது கேட்டலாகை விரிவாக்கும் ஆப்பிள் நிறுவனம் - 9டூ5மேக்".
- ↑ "2021 இல் ஆப்பிள் புதிய நிகழ்ச்சி வீகிரேஷ்ட் - ஃபார்ச்சூன்".
- ↑ "ஜேம்ஸ் பாண்ட் படத்தின் உண்மையான மதிப்பென்ன? - ஹாலிவுட் ரிப்போர்ட்டர்".
- ↑ "நெட்பிளிக்சுடன் போட்டியிடும் ஆப்பிள் நிறுவனம் - அப்சர்வர்".
- ↑ "ஆப்பிளின் குறைவான சந்தா தொகைக்கு காரணம் - ஃபூல்.காம்".
- ↑ "நெட்பிளிக்சைத் துரத்தும் நிறுவனங்கள் - வாக்ஸ்".
- ↑ "ஆப்பிள் ஒன் - தி வேர்ஜ்".