அமேசான் பிரைம் வீடியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Amazon Prime Video logo.svg

2018 ஆம் ஆண்டில் இருந்து அமேசான் பிரைம் வீடியோவின் முத்திரை
வலைத்தள வகைமேலதிக ஊடக சேவை
தலைமையகம்சியாட்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
சேவைத்தளங்கள்உலகம்முழுதும் ( சீனா, கியூபா, ஈரான், வட கொரியா, சிரியா தவிர)
உரிமையாளர்அமேசான்.காம்
துறைமகிழ்கலை
மக்கள் ஊடகம்
தயாரிப்புஊடக ஓடை
கோரிய நேரத்து ஒளிதம்
எண்ணிம விநியோகம்
சேவைதிரைப்படம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி
தயாரிப்பு மற்றும் விநியோகம்
வணிக நோக்கம்உள்ளது
பதிவு செய்தல்தேவைப்படுகிறது
பயனர்கள்15 கோடி சந்தாதாரர்கள்[1]
துவங்கியதுசெப்டம்பர் 7, 2006
தற்போதைய நிலைஇயங்கலை
உரலிwww.primevideo.com


அமேசான் பிரைம் வீடியோ அல்லது சுருக்கமாக பிரைம் வீடியோ என்பது அமேசான் என்கிற அமெரிக்க நிறுவனத்தின் சந்தா அடிப்படையிலான ஊடக ஓடை மற்றும் வாடகை வசதி கொண்ட மேலதிக ஊடக சேவையாகும். இது அமேசான் நிறுவனத்தின் பிரைம் சந்தா திட்டத்தின்கீழ் வருகிறது.

கூறுகள்[தொகு]

தரம்[தொகு]

திறன்பேசியைப் பொருத்து அமேசான் பிரைம் வீடியோவில் 4கே தரம் வரை காணொலிகளைக் காண முடியும். டால்பி டிஜிட்டல் 5.1 திரையரங்கு சூழொலியையும் அமேசான் ஆதரிக்கிறது.[2]

எனினும், அமேசானில் உள்ள அனைத்து காணொலிகளையும் மேற்சொன்ன தரங்களில் காணல் கேட்டல், காணொலி வெளியான ஆண்டு, திறன்பேசியின் திறம், பயன்படுத்தப்படும் இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொருத்தே அமையும்.

சான்றாக, கொரோனா தொற்று காலக்கட்டத்தில், உலகளாவிய தரவு பயன்பாடு மிகும் என்பதைக் கருத்தில் கொண்டு, அமேசான் காணொலிகள் தரவு பரிமாற்ற நெரிசலைத் தவிர்க்க வேண்டி தரம் குறைக்கப்பட்டன.[3][4]

தளம்[தொகு]

சீனா, கியூபா, ஈரான், வட கொரியா, சிரியா தவிர உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவை காணமுடியும். ஊடக ஓடையின் மூலம் வலைத்தளங்கள் வழியாகவும் கைபேசி செயலி வழியாகவும் கணினி மென்பொருள் வழியாகவும் அமேசான் பிரைம் வீடியோவைக் காண முடிகிறது.[5] ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சிகளில் கூட குரோம்காஸ்ட் உதவியுடன் பிரைம் வீடியோவைக் காண முடியும்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அமேசான் பிரைம் வீடியோ வாடிக்கையாளர்கள் -போர்ப்ஸ் ஆங்கிலக் கட்டுரை". Forbes. ஜனவரி 31, 2020. ஜனவரி 31, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "அமேசானும் 4கேவும் பாக்கெட் இன்டர்நேஷனல் ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
  3. "எஃப்.டி.காம் - எண்ணிமத் தளங்கள் தரம் குறைப்பு - ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
  4. "எஃப்.டி.காம் - அமேசான் தரம்குறைப்பு - ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
  5. "அமேசான் இயங்கும் நாடுகள் - ஆங்கில வலைத்தளக் கட்டுரை". Archived from the original on 2018-10-14. 2021-03-05 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  6. "ஆப்பிள் தொலைக்காட்சியில் அமேசான் - தி வேர்ஜ் ஆங்கில வலைத்தளச் செய்தி".
  7. "அமேசான் ஆதரிக்கும் சாதனங்கள் (ஆங்கிலம்)". 2017-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-05 அன்று பார்க்கப்பட்டது.