சோனி பிக்சு
சோனி பிக்சு | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 1 ஏப்ரல் 2006 |
உரிமையாளர் | சோனி பிக்சர்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா வங்காளம் |
தலைமையகம் | மும்பை மகாராட்டிரம் |
துணை அலைவரிசை(கள்) | சோனி தொலைக்காட்சி சோனி யே! |
சோனி பிக்சு என்பது சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 1, 2006 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பையை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயங்கி வருகின்றது.
வரலாறு
[தொகு]சோனி பிக்சு தொலைக்காட்சி ஏப்ரல் 1, 2006 அன்று ஒரு ஆங்கிலத் திரைப்பட அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த அலைவரிசையில் பல்வேறு உன்னதமான பழைய அமெரிக்க ஆங்கிலத் திரைப்படங்களை டிசம்பர் 31, 2010 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பியது. பின்னர் சனவரி 1, 2011 அன்று இந்த அலைவரிசை புதுப்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு வரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டில் இருந்து புதிய மற்றும் சில பிரபலமான உள்ளடக்கத்தை ஒளிபரப்பத் தொடங்கியது.[1]
தற்பொழுது ஆங்கில மொழித் திரைப்படங்களுடன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தனது சேவையை தொடர்கின்றது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "English entertainment war heats up; Sony PIX ties up with Sony Pictures Entertainment". Exchange 4 media. 17 September 2010.
- ↑ "the movie will premiere in English, Hindi, Tamil, and Telugu only on Sony PIX SD and HD". exchange4media. 31 August 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- 2006 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்
- மும்பையில் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள்
- வங்காளதேசத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள்
- தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்
- தெலுங்கு மொழி தொலைக்காட்சி அலைவரிசைகள்
- இந்தி மொழி தொலைக்காட்சி அலைவரிசைகள்
- இந்தியாவில் ஆங்கில மொழி தொலைக்காட்சி அலைவரிசைகள்
- திரைப்பட அலைவரிசைகள்