வானவில் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானவில் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் பெப்ரவரி 14, 2016 (2016-02-14)
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் www.vaanaviltelevision.com

வானவில் தொலைக்காட்சி என்பது பெப்ரவரி 14, 2016 அன்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும்.[1][2]இந்த தொலைக்காட்சியில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், மதம் சார்த்த நிகழ்ச்சிகள், திரைப்படத்துறை சார்த்த நிகழ்ச்சிகள், மொழிமாற்றுத்தொடர்கள் என் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது.

நிகழ்ச்சிகள்[தொகு]

  • பெண் - சாதிக்க பிறந்தவள்
    • இது முழுக்க பெண்களை பற்றிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நீலிமா ராணி முதல் தொகுத்து வழங்கினார். திங்கள் முதல் வெள்ளி வரை 11:30 மணி முதல் 12:00 மணிவரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷாப்பிங், ஸ்டைல் பேஷன், மனம், மங்கையர் திலகம், காய் கனி தானியம், ஜோதிட அறிவியல் போன்ற பிரிவுகள் உண்டு.
  • தாமுவுடன் சமையல்
    • பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு இன் சமயல் நிகழ்ச்சி.
  • தீர்க்க சுமங்கலி[3]
  • மாலினி ஐயர்
    • தமிழ் பிராமணப்பெண்ணான மாலினி ஐயர் ஒரு பஞ்சாபி பையனை திருமணம் செய்து கொள்கிறாள். தன் புகுந்த வீட்டுக்கு வந்ததும் கலாச்சாரமும், மொழியும் அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க, அதில் இருந்து எப்படி வெளிவந்தாள் என்பதே கதை. இந்த தொடரில் நடிகை ஸ்ரீதேவி மாலினி ஐயராக நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]