வசந்தம் தொலைக்காட்சி
வசந்தம் தொலைக்காட்சி | |
---|---|
முகவரி | |
விக்கிரமசிங்கபுர, பத்தரமுல்ல, இலங்கை | |
தகவல் | |
தொடக்கம் | 2009 சூன் 25 |
இணையம் | www.vasantham.lk |
வசந்தம் தொலைக்காட்சி (ஆங்கிலம்: Vasantham TV) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பப்படும் தமிழ் மொழியிலமைந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். ஐ. டி. என். நிறுவனத்தினால் இந்த அலைவரிசை நடத்தப்படுகின்றது. வசந்தம் தொலைக்காட்சி முதன் முதலாக 2009 சூன் 25ஆம் திகதி ஒளிபரப்பப்பட்டது.
ஒளிபரப்பப்படும் இடங்கள்
வசந்தம் தொலைக்காட்சியானது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் அதி உயர் அதிர்வெண் அலைவரிசை 9இல் ஒளிபரப்பப்படுகின்றது. 2010 சனவரி 6இலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மீ உயர் அதிர்வெண் 25இல் ஒளிபரப்பப்படுகின்றது. உலகெங்கிலுமுள்ள மக்கள் வசந்தம் தொலைக்காட்சியை வசந்தம் தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாகப் பார்க்க முடியும்.
நிகழ்ச்சிகள்
ஆட்டோகிராஃப், பள்ளிக்கூடம், சிரி மனமே, தலைவாசல், 7ஆம் நாள், தூவானம், சுற்றி வரும் பூமி, புது வசந்தம், வாங்க பழகலாம், தூவானம் தேன் சிந்தும் ராகங்கள், நினைத்தாலே இனிக்கும்,அழகான நாட்கள் முதலிய நிகழ்ச்சிகள் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.[1]