ஐ அலைவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ அலைவரிசை

ஐ அலைவரிசை (Channel Eye), 1999ஆண்டு ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் 2வது அலைவரிசை (ரூபவாகினி - 2) ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது ஆகஸ்ட் 20 2000 ஆண்டில் ஐ அலைவரிசை (Channel Eye) என்று பெயர் மாற்றப்பட்டது.

1982 ஆம் ஆண்டின் இல. 6ம் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தேசியத் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து அல்லது தயாரித்து ஒளிபரப்பி வந்தது.

இந்த அடிப்படையில் ஐ அலைவரிசை தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்கெனவும், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கெனவும் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நிகழ்ச்சிகளை கூடுதலாக ஒளிபரப்பி வந்தது. தென்னிந்திய தமிழ் ஒளிபரப்பு நிலையங்களில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து மீள் ஒளிபரப்பியும் தருவித்து ஒளிபரப்பியும் வந்தது. பின்பு உள்நாட்டு தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பு நேரம் அதிகரித்தது. பல முஸ்லிம் நிகழ்ச்சிகள் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_அலைவரிசை&oldid=3310246" இலிருந்து மீள்விக்கப்பட்டது