ரி.என்.எல் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரி.என்.எல் தொலைக்காட்சி
Typeஒளிபரப்பாக்கம்
Countryஇலங்கை
Availabilityதேசிய அளவில்
Ownerடெல்சான் நெட்வார்க் நிறுவனம்
Launch date
1993
Official website
http://www.tnltvisira.com/

ரி.என்.எல். தொலைக்காட்சி (TNL TV) இலங்கையில் டெல்சான் நெட்வார்க் நிறுவனம் ரி.என்.எல். தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையை ஜூன் 21 1993 தொடக்கம் நடத்தி வருகின்றது. 1979ல் சுயாதீன தொலைக்காட்சியை ஆரம்பித்த சான் விக்கிரமசிங்க அந்த நிலையத்தை அரசு பொறுப்பேற்ற காரணத்தினால் ரி.என்.எல். என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

இந்தச் சேவையில் இறக்குமதி செய்யப்பட்ட நிகழ்ச்சிகளே ஒளிபரப்பப்பட்டு வந்தன. உள்நாட்டு சிங்கள நிகழ்ச்சிகளையும். அரசியல் விவாதங்களையும் தமிழில் சில திரைப்படங்களையும், ஒரு சில விளம்பர நிகழ்ச்சிகளையும், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் செய்திகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது.டயலாக் தொலைக்காட்சியில் 11 ஆவது வரிசையாகவும் டிஷ் தொலைக்காட்சியில் 2511 வரிசை எண்ணிலும் ஒளிபரப்பாகிறது. மேலும் இது இலங்கை அகல அலைவரிசை இணைய அணுகல் தொலைக்காட்சி மற்றும் பிஇஓ தொலைக்காட்சி ஐபி தொலைக்காட்சி (வரிசை13) போன்றவற்றிலும் காணலாம்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Telshan Networks". tnltv.lk (ஆங்கிலம்). 2018-08-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-08-14 அன்று பார்க்கப்பட்டது.


வெளி இணைப்புகள்[தொகு]