ரி.வி. லங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரி.வி. லங்கா

ரி.வி. லங்கா (TV Lanka) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள மொழி தொலைக்காட்சிச் சேவையாகும். [1] டிசம்பர் 5 2001 ல் செய்மதி ஒளிபரப்புச் சேவையாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஒளிபரப்பு நிலையம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் சிங்கள மொழி பேசும் இலங்கையர்களை நோக்கமாகக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது. சிங்கள மொழிபேசும் வெளிநாட்டிலிருப்பவர்களை திருப்திப்படுத்தும் ஒரு முழுமையான சேவையாகும். நாடகங்கள் இசை விவரணம் சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை ஒளிபரப்பி வருகிறது.

தற்போது தேசிய மட்டத்தில் நிகழ்ச்சிகளை பார்க்கக்கூடியதாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி.வி._லங்கா&oldid=2953378" இலிருந்து மீள்விக்கப்பட்டது