சுவர்ணவாஹினி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | |
Type | ஒளிபரப்பாக்கம் |
---|---|
Country | இலங்கை |
Availability | தேசிய அளவில் |
Owner | ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் |
Launch date | மார்ச்சு 16, 1997 |
Official website | http://www.swarnavahini.lk/ |
சுவர்ணவாஹினி தொலைக்காட்சி (Swarnavahini) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைக்காட்சிச் சேவையாகும். மார்ச்சு 16 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை ஈஏபி எதிரிசிங்க நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவையாக ஈ.டி.வி தொலைக்காட்சி ஆங்கில சேவையை வழங்குகின்றது.
ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் 1994ம் ஆண்டு தொடக்கம் ஈ.டி.வி -1 (E.T.V - 1) ஈ.டி.வி -2 (E.T.V - 2) என்ற ஆங்கில சேவைகளை ஆரம்பித்தது. அதில் ஒன்று 1997ல் சுவர்ணவாஹினி என்ற சிங்கள மொழி ஒளிபரப்பாக மாற்றம் அடைந்தது.
சுவர்ணவாஹினி செய்திகள், விவரண நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள், இசை, நிகழ்ச்சிகள் நாடகங்கள் எனப் பல்வேறுபட்ட சிங்கள மொழி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றது. செய்திகள் சிங்கள மொழியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. உள்நாட்டுத் தயாரிப்புக்கள் மூலம் சிங்கள மொழி பேசுபவர்களுக்கான தனியார் ஒளிபரப்புச் சேவையாக திகழ்கிறது.