டி. ஆர். ராமண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சாவூர் ரங்கநாயகி ராமண்ணா
பிறப்பு தஞ்சாவூர் ரங்கநாயகி ராமண்ணா
தஞ்சாவூர், மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா
வாழ்க்கைத்
துணை
சக்குபாய்
பி. எஸ். சரோஜா[1]
உறவினர்கள் டி. ஆர். ராஜகுமாரி
(மூத்த சகோதரி) [2]

தஞ்சாவூர் ரங்கநாயகி ராமண்ணா அல்லது சுருக்கமாக ராமண்ணா அல்லது டி. ஆர். ராமண்ணா ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவராவார். தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த டி. ஆர். ராஜகுமாரி இவரது மூத்த சகோதரி ஆவார்.

திரை வாழ்க்கை[தொகு]

ராமண்ணா சிட்டி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குனராக வளர்ந்தார். தனது சகோதரி டி. ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதற்கு, தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ஆர். ஆர். பிக்சர்சு என பெயர் சூட்டினார். தமது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த திரைப்படங்களில் பெரும்பாலானவை சிறந்த வெற்றித் திரைப்படங்களாகும்.

பங்களித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

 1. காத்தவராயன்
 2. பெரிய இடத்துப் பெண்
 3. பணக்கார குடும்பம்
 4. பணம் படைத்தவன்
 5. தாலியா சலங்கையா
 6. என்னைப்போல் ஒருவன்
 7. சங்கரி
 8. கன்னித்தீவு
 9. குப்பத்து ராஜா
 10. நீச்சல் குளம்
 11. சொர்க்கத்தில் திருமணம்
 12. வைரம்
 13. குமரிப் பெண்
 14. பறக்கும் பாவை
 15. பவானி
 16. நான்
 17. மூன்றெழுத்து
 18. தங்கச் சுரங்கம்
 19. சொர்க்கம்
 20. வீட்டுக்கு ஒரு பிள்ளை
 21. வாழப்பிறந்தவள்
 22. கூண்டுக்கிளி
 23. குலேபகாவலி
 24. புதுமைப்பித்தன்
 25. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
 26. இரத்தினபுரி இளவரசி
 27. பாசம்
 28. சக்தி லீலை
 29. மணப்பந்தல்

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

 1. ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)

= தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._ராமண்ணா&oldid=2228667" இருந்து மீள்விக்கப்பட்டது