உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய இடத்துப் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய இடத்துப் பெண்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்சு
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜாதேவி
வெளியீடுமே 10, 1963
நீளம்4415 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெரிய இடத்துப் பெண் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி, மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
பெரிய இடத்துப் பெண்
இசை
வெளியீடு1963
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்வெஸ்ட்ரக்சு
இசைத் தயாரிப்பாளர்விசுவநாதன்-இராமமூர்த்தி

இத்திரைப்படத்திற்கு விசுவநாதன்-இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[4] இப்படத்தில் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது விசுவநாதன் பிற படங்களுக்கு் இரவும் பகலுமாக இசையமைப்பு வேலை செய்து கொண்டிருந்ததால் ஒரு நாள் காலை இசையமைக்க வர தாமதமாகிவிட்டது. அன்று வந்த கண்ணதாசன் விசுவநாதனுக்காக காத்திருந்து பிறகு வேறு பணியுள்ளதால், பாடல் வரிகள் எழுதி கொடுத்துவிட்டு அதற்கு மெட்டைத்துக் கொள்ளுங்கள் என்று சென்றுவிட்டார். அப்படி எழுதிய பாடல் வரிகள் தான் "அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா".[5]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 அன்று வந்ததும் (மகிழ்ச்சி) டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 03:09
2 அன்று வந்ததும் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:00
3 அவனுக்கென்ன தூங்கி டி. எம். சௌந்தரராஜன் 02:43
4 கண்ணென்ன கண்ணென்ன டி. எம். சௌந்தரராஜன் 03:14
5 கட்டோடு குழலாட பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈசுவரி 04:58
6 பாரப்பா பழனியப்பா டி. எம். சௌந்தரராஜன் 03:01
7 துள்ளி ஓடும் கால்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:29

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/April12_1_15/Potpourri_of_titbits_about_Tamil_cinema_Kalaivanar_NS_Krishnan_page1.html
  2. https://antrukandamugam.wordpress.com/2013/09/21/manimala/
  3. https://antrukandamugam.wordpress.com/2013/07/28/sethupathi/
  4. "Periya Idathu Penn Songs". raaga. Retrieved 2015-01-04.
  5. Old Is Gold TMS MSV Legend (2019-09-29). "Kannadasan LEGEND Malaysia 2002 vol 14 Legend M S Viswanathan By M Thiravidaselvan". Retrieved 2025-04-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_இடத்துப்_பெண்&oldid=4258140" இலிருந்து மீள்விக்கப்பட்டது