டி. கே. ராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டி. கே. இராமமூர்த்தி
T. K. Ramamoorthy
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி
பிறப்பு15 மே 1922 (1922-05-15) (அகவை 101)
பிறப்பிடம்திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம்
இறப்பு17 ஏப்ரல் 2013(2013-04-17) (அகவை 90)
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி
ஆர்மோனியம்
வயலின்
இசைத்துறையில்1950கள்-1970கள்

டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி (Trichirappalli Krishnasamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளரும் வயலின் கலைஞரும் ஆவார். இவரும் எம். எஸ். விஸ்வநாதனும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி என்ற இணையாக பல திரைப்படங்களுக்கு 1950/1960 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:

எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை[தொகு]

எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.

விரிவான தரவுகளுக்கு -

மறைவு[தொகு]

இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் நாள் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!". Archived from the original on 2013-05-14. பார்க்கப்பட்ட நாள் 2013-04-17.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராமமூர்த்தி&oldid=3847649" இலிருந்து மீள்விக்கப்பட்டது