உள்ளடக்கத்துக்குச் செல்

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்பவர்கள் தென்னிந்தியத் திரையுலகின் இணைகளான ம. சு. விசுவநாதன் மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆவர். இவர்கள் 1952 லிருந்து ஒன்றாக இணைந்து பணியாற்றத் தொடங்கி 100 க்கும் அதிகமான படங்களில் பணியாற்றினர். 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு பிரிந்தார்கள். அதன் பிறகு ராமமூர்த்தி 1966 – 1986 வரை 16 திரைப்படங்களில் பணியாற்றினார். இவர்கள் மீண்டும் 30 வருடங்களுக்குப் பிறகு 1995 எங்கிருந்தோ வந்தான் திரைப்படத்தில் இணைந்தார்கள்.

2012ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியின் 14-வது ஆண்டு தொடக்கவிழாவில் முதல்வர் ஜெயலலிதா விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைக்கு 60 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியும், இருவருக்கும் மகிழுந்துகளையும் பரிசாக தந்தார்.[1]

தொடக்க வாழ்க்கை

[தொகு]

ராமமூர்த்தி

[தொகு]

டி. கே. ராமமூர்த்தி திருச்சியில் பிரபல இசைக்குடும்பத்தில் பிறந்தார். சிறுவயது முதலே வயலின் வாசிப்பவராக இருந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணசாமி பிள்ளை மற்றும் தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை ஆகியோரும் வயலின் வாசிப்பில் சிறந்தவர்கள். ராமமூர்த்தி சிறுவயதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 1940களில் அவிச்சி மெய்யப்பச் செட்டியார் அவர்களிடம் பணியாற்றினர். பி. எஸ் திவாகர், ஆர் சுதர்சனம் போன்றோரின் நட்புடன் திரையுலகத்தில் வாய்ப்புகளைத் தேடினார். சி. ஆர். சுப்பராமன், டி. ஜி. லிங்கப்பா போன்ற வயலினிஸ்டிடம் பணியாற்றினார்.

விஸ்வநாதன்

[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் நடிகராகவும், பாடகராகவும் ஆசைகொண்டிருந்தார். 1940 களில் மேடை நாடகங்களில் நடித்தார். 1950 களில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கிய டி. ஆர். பாப்பா அவர்கள், இசையமைப்பாளராகுமுன் எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசைக்குழுவில் ஒரு வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவர் எம். எஸ். விஸ்வநாதனை அந்தக் குழுவில் ஒரு எடுபிடி வேலைகள் செய்யும் உதவியாளராக இணைத்து விட்டார். விஸ்வநாதனுக்கு இசையமைப்பதில் ஆர்வம் இருந்தது. அதனால் இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களுடன் சேர்ந்தார். அதன் பின் சி. ஆர். சுப்புராமன் குழுவில் ஆர்மோனியம், பியானோ என்பவற்றை வாசிக்கும் கலைஞராக முன்னேறினார். டி. ஜி. லிங்கப்பா மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆகியோரும் இவருடன் இணைந்து பணியாற்றினார்கள்.

எம். எஸ். விஸ்வநாதன் 15 வயதிலேயே மூன்று இசைக்கருவிகளை இசைக்கும் திறனைப் பெற்றிருந்தார். டி. கே. ராமமூர்த்தி 16 வயதிலிருந்து வயலின் இசைக் கலைஞராக இருந்தார்.

இறப்பு

[தொகு]

நோய்வாய்ப்பட்டிருந்த இராமமூர்த்தி 2013 ஏப்ரல் 17 அன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.[2][3] அப்போது அவருக்கு 91 வயது.[4]

விஸ்வநாதன் 2015 சூன் 27 அன்று சென்னை மருத்துவமனையில் சுவாசப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டார்.[5] 2015 சூலை 14 அன்று மருத்துவமனையில் காலமானார்.[6]

திரைவாழ்க்கை

[தொகு]
ஆண்டுபடம்மொழிஇயக்குநர்தயாரிப்புகுறிப்பு
1952பணம்தமிழ்என். எஸ். கிருஷ்ணன்மதிர் பிச்சர்ஸ்
1953சண்டிராணிதமிழ்பானுமதி ராமகிருஷ்ணாபரணி கலையகம்சி. ஆர். சுப்பராமன்
1953சண்டிராணிதெலுங்குபானுமதி ராமகிருஷ்ணாபரணி கலையகம்சி. ஆர். சுப்பராமன்
1953சண்டிராணிஹிந்திபானுமதி ராமகிருஷ்ணாபரணி கலையகம்சி. ஆர். சுப்பராமன்
1953மறுமகள்தமிழ்டி. யோகானந்த்கிருஷ்ணா பிச்சர்ஸ்இணை இசை இயக்குநர் ஜி. ராமநாதன் & சி. ஆர். சுப்பராமன்
1954சொர்க்கவாசல்தமிழ்ஏ. காளிங்கம்பரிமளம்பிச்சர்ஸ்
1954சொர்க்கவாசல்தெலுங்குஏ. காசிலிங்கம்பரிமளம் பிச்சர்ஸ்
1954சுகம் எங்கேதமிழ்கே. ரமனோத்மாடர்ன் தியேட்டர்ஸ்
1954வைரமாலைதமிழ்என். ஜெகன்நாத்வைத்தியா திரைப்படங்கள்
1954ரத்தக்கண்ணீர்தமிழ்கிருஷ்ணம்-பஞ்சுநேசனல் திரைப்படங்கள்பின்னணி இசை
1955குலேபகாவலிதமிழ்டி. ஆர். ராமண்ணாஆர்ஆர் பிச்சர்ஸ்இணை இசை இயக்குநர் கே. வி. மகாதேவன்
1955காவேரிதமிழ்டி. யோகானந்த்கிருஷ்ணா பிச்சர்ஸ்இணை இசை இயக்குநர் ஜி. ராமநாதன்
1955விஜயா கௌரிதெலுங்குடி. யோகானந்த்கிருஷ்ணா பிச்சர்ஸ்இணை இசை இயக்குநர் ஜி. ராமநாதன்
1955நீதிபதிதமிழ்ஏ. எஸ். ஏ. சாமிவிஜயா திரைப்படங்கள்
1955சந்தோசம்தெலுங்குஜூப்பிட்டர் பிச்சர்ஸ்
1955போர்டர் கந்தன்தமிழ்கே. வீம்புநரசு ஸ்டூடியோஸ்
1956ஜெய கோபிதமிழ்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1956மா கோபிதெலுங்குபி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1956பாசவலைதமிழ்ஏ. எஸ். நாகராஜன்மாடர்ன் தியேட்டர்ஸ்
1956தெனாலி ராமகிருஷ்ணாதெலுங்குபி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1956தெனாலி ராமன்தமிழ்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1957பக்த மார்க்கன்டேயாதமிழ்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1957பக்த மார்க்கன்டேயாதெலுங்குபி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1957பக்த மார்க்கன்டேயாகன்னடம்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1957மகாதேவிதமிழ்சுந்தர் ராவ் நட்கர்னிசிறீ கணேஷ் மூவிடோன்
1957பத்தினி தெய்வம்தமிழ்சித்ரப்பு நாராயண ராவ்விஆர்வி புரொடக்சன்ஸ்
1957புதையல்தமிழ்கிருஷ்ணன்-பஞ்சுகமல் பிரதர்ஸ்
1958குடும்ப கௌரவம்தமிழ்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1958குடும்ப கௌரவம்தெலுங்குபி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1958மாலையிட்ட மங்கைதமிழ்ஜி. ஆர். நாதன்கண்ணதாசன் திரைப்படங்கள்
1958மகாதேவிதெலுங்குசுந்தர் ராவ் நட்கர்ணிசிறீ கணேஷ் மூவிடோன்
1958பதி பக்தி (1958 திரைப்படம்)தமிழ்ஏ. பீம்சிங்புத்தா பிச்சர்ஸ்
1958பதி பக்தி (1958 திரைப்படம்)தெலுங்குஏ. பீம்சிங்புத்தா பிச்சர்ஸ்இணை இசை இயக்குநர் டி. செலபதி ராவ்
1958பெற்ற மகனை விற்ற அன்னைதமிழ்திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்மாடர்ன் தியேட்டர்ஸ்
1958லில்லிமலையாளம்எப். நாகூர்ஹடி பிச்சர்ஸ்
1959அமுத வள்ளிதமிழ்ஏ. கே. சேகர்ஜூப்பிட்டர் பிச்சர்ஸ்
1959பாகப்பிரிவினை (திரைப்படம்)தமிழ்ஏ. பீம்சிங்சரவணா திரைப்படங்கள்
1959ராஜா மலைய சிம்மன்தமிழ்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1959ராஜ மலைய சிம்ஹாதெலுங்குபி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1959சிவகெங்கைச் சீமை (திரைப்படம்)தமிழ்கே. சங்கர்கண்ணதாசன் திரைப்படங்கள்
1959தாலி கொடுத்தான் தம்பிதமிழ்திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்மாடர்ன் தியேட்டர்ஸ்
1959தங்கப்பதுமைதமிழ்ஏ. எஸ். ஏ. சாமிஜூப்பிட்டர் பிச்சர்ஸ்
1960ஆளுக்கொரு வீடுதமிழ்எம். கிருஷ்ணன்சுபா மூவிஸ்
1960கவலை இல்லாத மனிதன்தமிழ்கே. சங்கர்கன்னடசன் புரொடக்சன்ஸ்
1960மன்னாதி மன்னன்தமிழ்எம். நடேசன்நடேஷ் ஆர்ட் பிச்சர்ஸ்
1960ஒன்று பட்டால் உண்டு வாழ்வுதமிழ்டி. ஆர். ராமண்ணாரங்கா பிச்சர்ஸ்
1960ரத்தினபுரி இளவரசிதமிழ்டி. ஆர். ராமண்ணாசிறீ விநாயகா பிச்சர்ஸ்
1961பாக்கிய லட்சுமிதமிழ்கே. வி. சீனிவாசன்கனகா திரைப்படங்கள்
1961மணப்பந்தல்தமிழ்டி. ஆர். ராமண்ணாஆர்ஆர் பிச்சர்ஸ்
1961பாலும் பழமும்தமிழ்ஏ. பீம்சிங்சரவணா திரைப்படங்கள்
1961பாசமலர்தமிழ்ஏ. பீம்சிங்ராஜமணி திரைப்படங்கள்
1961பாவமன்னிப்பு (திரைப்படம்)தமிழ்ஏ. பீம்சிங்புத்தா பிச்சர்ஸ்
1961விஜயேந்திர வீரபத்ராகன்னடம்ஆர். நாகேந்திர ராவ்ஆர்என்ஆர் பிச்சர்ஸ்
1962ஆலயமணி (திரைப்படம்)தமிழ்கே. சங்கர்பிஎஸ்வி பிச்சர்ஸ்
1962பலே பாண்டியாதமிழ்பி. ஆர். பந்துலுபத்மினி பிச்சர்ஸ்
1962பந்த பாசம்தமிழ்ஏ. பீம்சிங்சாந்தி திரைப்படங்கள்
1962காத்திருந்த கண்கள்தமிழ்தத்தினேனி பிரகாஷ் ராவ்வசுமதி பிச்சர்ஸ்
1962நெஞ்சில் ஓர் ஆலயம்தமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)சித்ராலயா
1962நிச்சய தாம்பூலம்தமிழ்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1962பெல்லி தாம்பூலம்தெலுங்குபி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1962பாத காணிக்கைதமிழ்கே. சங்கர்சரவணா திரைப்படங்கள்
1962படித்தால் மட்டும் போதுமாதமிழ்ஏ. பீம்சிங்ரங்கநாதன் பிச்சர்ஸ்
1962பார்த்தால் பசி தீரும்தமிழ்ஏ. பீம்சிங்ஏவிஎம்
1962பாசம் (திரைப்படம்)தமிழ்டி. ஆர். ராமண்ணாஆர்ஆர் பிச்சர்ஸ்
1962போலீஸ்காரன் மகள்தமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)சித்திரலேகா பிச்சர்ஸ்
1962செந்தாமரைதமிழ்ஏ. பீம்சிங்ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ்
1962சுமைதாங்கி (திரைப்படம்)தமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)விசாலாட்சி புரொடக்சன்ஸ்
1962தென்றல் வீசும்தமிழ்பி. எஸ். ரங்காவிக்ரம் புரொடக்சன்ஸ்
1962வீரத்திருமகன்தமிழ்ஏ. சி. திருலோகச்சந்தர்முருகன் பிரதர்ஸ்
1963ஆனந்த ஜோதிதமிழ்வி. என். ரெட்டி & ஏ. எஸ். ஏ. சாமிபிஎஸ்வி பிச்சர்ஸ்
1963இதயத்தில் நீதமிழ்முக்தா சீனிவாசன்முக்தா திரைப்படங்கள்
1963இது சத்தியம்தமிழ்கே. சங்கர்சரவணா திரைப்படங்கள்
1963கற்பகம் (திரைப்படம்)தமிழ்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்அமர்ஜோதி மூவிஸ்
1963மணி ஓசைதமிழ்பி. மாதவன்ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ்
1963நெஞ்சம் மறப்பதில்லைதமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)மனோகர் பிச்சர்ஸ்
1963பார் மகளே பார்தமிழ்ஏ. பீம்சிங்கஸ்தூரி திரைப்படங்கள்
1963பணத்தோட்டம்தமிழ்கே. சங்கர்சரவணா திரைப்படங்கள்
1963பெரிய இடத்துப் பெண்தமிழ்டி. ஆர். ராமண்ணாஆர்ஆர் பிச்சர்ஸ்
1963மான்சி சேதுதெலுங்குடி. ஆர். ரமணாஆர்ஆர் பிச்சர்ஸ்
1964ஆண்டவன் கட்டளைதமிழ்கே. சங்கர்பிஎஸ்வி பிச்சர்ஸ்
1964தெய்வத் தாய்தமிழ்பி. மாதவன்சத்யா மூவிஸ்
1964என் கடமைதமிழ்எம். நடேசன்நடேஷ் ஆர்ட் பிச்சர்ஸ்
1964கை கொடுத்த தெய்வம்தமிழ்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்சிறீ பொன்னி புரொடக்சன்ஸ்
1964கலை கோவில்தமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)பாக்கியலட்சுமி பிச்சர்ஸ்
1964கர்ணன்தமிழ்பி. ஆர். பந்துலுபத்மினி பிச்சர்ஸ்
1964கருப்பு பணம்தமிழ்ஜி. ஆர். நாதன்விசாலாட்சி திரைப்படங்கள்
1964காதலிக்க நேரமில்லைதமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)சித்ராலயா
1964பச்சை விளக்குதமிழ்ஏ. பீம்சிங்வேல் பிச்சர்ஸ்
1964படகோட்டி (திரைப்படம்)தமிழ்தத்தினேனி பிரகாஷ் ராவ்சரவணா திரைப்படங்கள்
1964பணக்கார குடும்பம்தமிழ்டி. ஆர். ராமண்ணாஆர்ஆர் பிச்சர்ஸ்
1964புதிய பறவைதமிழ்தாதா மிரசிசிவாஜி புரொடக்சன்சு
1964சர்வர் சுந்தரம்தமிழ்கிருஷ்ணம்-பஞ்சுஏவிஎம்
1964வாழ்க்கை வாழ்வதற்கேதமிழ்கிருஷ்ணம்-பஞ்சுகமல் பிரதர்ஸ்
1965பஞ்சவர்ண கிளிதமிழ்கே. சங்கர்சரவணா திரைப்படங்கள்
1965எங்க வீட்டுப் பிள்ளைதமிழ்சாணக்யாவிஜயா புரொடக்சன்ஸ்
1965ஹலோ மிஸ்டர் ஜெமிந்தார்தமிழ்கே. ஜெ. மகாதேவன்சுதர்சனம் பிச்சர்ஸ்
1965பணம் படைத்தவன்தமிழ்டி. ஆர். ராமண்ணாஆர்ஆர் பிச்சர்ஸ்
1965பழநிதமிழ்ஏ. பீம்சிங்பாரத மாதா பிச்சர்ஸ்
1965பூஜைக்கு வந்த மலர்தமிழ்முக்தா சீனிவாசன்முக்தா திரைப்படங்கள்
1965சாந்திதமிழ்ஏ. பீம்சிங்ஏஎல்எஸ் புரோடக்சன்ஸ்
1965வாழ்க்கை படகுதமிழ்சுப்பிரமணியம் சீனிவாசன்ஜெமினி ஸ்டூடியோஸ்
1965வெண்ணிற ஆடைதமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)சித்ராலயா
1965ஆயிரத்தில் ஒருவன்தமிழ்பி. ஆர். பந்துலுபத்மினி பிச்சர்ஸ்
1995எங்கிருந்தோ வந்தான்தமிழ்சந்தான பாரதிவிஎஸ்ஆர் பிச்சர்ஸ்

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.dinamani.com/cinema/article1258273.ece இசையின் பொற்காலம் - தினகரன் 30 ஆகஸ்ட் 2012
  2. "TK Ramamurthy, noted music composer, passes away – The Times of India". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130426125705/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-17/chennai/38615223_1_j-jayalalithaa-jaya-tv-composer.
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-music-composer-ms-viswanathan-dead/article7420180.ece
  4. "TK Ramamurthy, noted music composer, passes away - Times Of India". web.archive.org. 2013-04-26. Archived from the original on 2013-04-26. Retrieved 2022-09-10.
  5. "M S Viswanathan Death". Telangana News Paper.
  6. "King of Film Music MS Viswanathan Passes Away". The New Indian Express.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வநாதன்-ராமமூர்த்தி&oldid=4210735" இலிருந்து மீள்விக்கப்பட்டது