நான் (1967 திரைப்படம்)
நான் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. கே. ராமராஜன் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
கதை | டி. என். பாலு |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயலலிதா |
வெளியீடு | நவம்பர் 1, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4523 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு எழுதி டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஒரு ராஜா தன் தொலைந்து போன மகனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று இறக்கிறார். பின்னர் ராஜாவின் மகன் தான் தான் என்று அதன் வழியாக சொத்துக்களுக்கு உரிமை கோரி மூன்று நபர்கள் வருவதை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் 1 நவம்பர் 1967 அன்று வெளியாகி, 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இது தெலுங்கில் நேனண்டே நேனே (1968) என்றும் இந்தியில் வாரிஸ் (1969) என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1]
கதை
[தொகு]ஒரு ராஜாவின் மகன் தன் தந்தையின் எதிரியிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது இளம் வயதிலேயே தொலைந்து போகிறார். அவரது தந்தை பல ஆண்டுகள் தன் மகனைத் தேடி கிடைக்காத சோகத்தில் இறந்துவிடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று பேர் இளவரசன் என்று கூறி அரண்மனைக்கு வந்து அனைத்து சொத்துக்களுக்கும் தானே வாரீசு என்று உரிமை கோருகின்றனர். மூவரும் தொலைந்த இளவரசனின் அடையாளங்களைக் கொண்டுள்ளனர் மேலும் குடும்ப வரலாறு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றனர். அரண்மனை நிர்வாகம் உண்மையான வாரிசைக் கண்டுபிக்கும் வரை மூன்று பேரையும் தங்க வைக்கிறது.
அந்த மூவரில் யாரும் உண்மையான வாரிசு இல்லை என்பதும், உண்மையான இளவரசனாக வேரொருவர் இருப்பது தெரியவரும்போது கதை திருப்பத்தை சந்திக்கிறது. ஆனால் அவருடைய இருப்பிடம் தெரியவில்லை. உண்மையான இளவரசனை அடைவதற்கான ஒரே வழி, அவர் இருக்கும் இடத்தை அறிந்த இந்த மூன்று பேர்தான்.
நடிகர்கள்
[தொகு]- சேகர்/சின்னராஜாவாக ரவிச்சந்திரன்
- கீதாவாக ஜெயலலிதா
- குமார்/சின்னராஜாவாக முத்துராமன்
- பரிமளமாக விஜயஸ்ரீ
- கமலாட்சியாக ஸ்ரீரஞ்சனி
- சிங்காரமாக மனோகர்
- லாலாக அசோகன்
- சுந்தரமாக நாகேஷ்
- மோகினியாக மனோரமா
- சுந்தரலிங்கமாக சுருளி ராஜன்
- உத்தண்டராமனாக என்னத்த கண்ணையா
- வேலு/வேல்சாக சாமிக்கண்ணு
- இராஜம்மமாவாக முத்துலட்சுமி
- அம்மு/பேபியாக பேபி பத்மினி
- சீலாவாக பி. வி. இராதா
- போராவாக மாதவி
தயாரிப்பு
[தொகு]நான் ஈஸ்ட்மேன்கலரில் வண்ணப்படமாக எடுக்கபட்டது.[2] நாகேஷ் தனது கதாபாத்திரத்தில் நடித்த போது, புதிய மூக்குக் கண்ணாடியை அதன் விலை வில்லையை அகற்றாமல் அணிந்திருந்தார்; ராமண்ணா அதை அகற்ற விரும்பினாலும், நகைச்சுவைக்காக விலை வில்லையுடனே நடிக்க நாகேஷ் முடிவு செய்தார்.[1]
இசை
[தொகு]படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதினர்.[3] படத்தில் இடம்பெற்ற "வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே" பாடல் அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கம் செப்டம்பர் (1961) படத்தின் இசை மெட்டில் உருவானது.[4]
பாடல்கள் | பாடகர் | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"இராஜா கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 4:28 |
"அதே முகம் அதே குணம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:32 | |
"நான் ஆணையிட்டால்" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி | (கலவைப் பாடல்) | 3:05 |
"போதுமோ இந்த இடம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 3:12 |
"அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ" | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி | 5:35 | |
"வந்தாள் என்னோடு எங்கேயோ" | எல். ஆர். ஈசுவரி | 4:26 | |
"பிறந்தநாள் விருந்தில் நடந்த கொலை" | கருவி | இசைக்குழு நடனம் | 6:08 |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]நான் 1 நவம்பர் 1967 [5][6] தீபாவளி நாளன்று வெளியாகி திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது.[7] ராமண்ணாவின் இயக்கம் மற்றும் புதுமையான கதைக்காக கல்கி படத்தைப் பாராட்டியது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Narasimham, M. L. (22 February 2019). "Nenante Nene (1968)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190301080419/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/nenante-nene-1968/article26337189.ece.
- ↑ "Naan". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 9 November 1967. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19671109&printsec=frontpage&hl=en.
- ↑ "Naan". JioSaavn. 31 December 1967. Archived from the original on 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
- ↑ Ramesh, K. V. (2 September 2017). "Come September again". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170921152916/http://www.thehindu.com/entertainment/movies/come-september-again/article19608480.ece.
- ↑ "1967 – நான் – ஸ்ரீ வினாயகா பிக் (கலர்)" [1967 – Naan – Sri Vinayaka Pic (Colour)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 9 October 2020. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
- ↑ "தீபாவளி ரிலீஸ்!" (in ta). குங்குமம். 25 October 2019 இம் மூலத்தில் இருந்து 26 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191026142021/http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9746&id1=40&issue=20191025.
- ↑ "நான்". Kalki. 19 November 1967. p. 15. Archived from the original on 24 July 2022. பார்க்கப்பட்ட நாள் 4 December 2021.
- 1967 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- டி. கே. ராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்