உள்ளடக்கத்துக்குச் செல்

மணப்பந்தல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணப்பந்தல்
இயக்கம்வி. என். ரெட்டி
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
டி. ஆர். ராஜகுமாரி
திரைக்கதைவி. என். ரெட்டி
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
சரோஜா தேவி
ஈ. வி. சரோஜா
எஸ். ஏ. அசோகன்
கலையகம்ஆர். ஆர். பிக்சர்சு
விநியோகம்ஆர். ஆர். பிக்சர்சு
வெளியீடு1961
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

மணப்பந்தல் (Manapanthal) 1961ஆம் ஆண்டில் வி. என். ரெட்டி இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜேந்திரன், சரோஜா தேவி, ஈ. வி. சரோஜா, எஸ். ஏ. அசோகன். ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் இந்திக்கி தீபம் இல்லாளே என்ற பெயரில் வெளிவந்தது. இரண்டும் சப்ரினா (1954) என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் கதையை ஒட்டியது.[2]

திரைக்கதை

[தொகு]

ராஜசேகரன் (எஸ். ஏ. அசோகன்) ஒரு குடிகாரர், அவருடைய இளைய சகோதரர் குணசேகரன் (எஸ். எஸ். ராஜேந்திரன்) ஒரு வெற்றிகரமான மருத்துவர். இவர்களின் விதவைத் தாய் கண்ணாம்பா (கண்ணாம்பா) ராஜசேகரனை சீர்திருத்த முயன்றார். குணசேகரன் வேறோர் ஊரில் ஒரு விதவை தாய் தருவம்மாவின் (கே. மாலதி) வீட்டில் தங்கியிருக்கிறான். அவளுடைய மகள் மாலதியிடம் (ஈ. வி. சரோஜா) குணசேகரன் ஆர்வம் காட்டினான்.

ஒரு நாள் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் போது, தொடருந்தில் குணசேகரன் தர்மலிங்கம் (வி. நாகையா) என்ற வயோதிபரையும் அவரது மகள் சுகுணாவையும் (சரோஜாதேவி) சந்திக்கிறான். இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கிறார்கள். இதற்கிடையில், ராஜசேகரனின் தாயார் அவனுக்கு சுகுணாவை நிச்சயித்து திருமணம் செய்விக்கிறார். குணசேகரன், ஒரு விபத்துக் காரணமாக, திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. சுகுணாவைப் பின்னர் சந்தித்தபோது, அதிர்ச்சியடைந்தான். ராஜசேகரன் தன் மனைவியையும், சகோதரனையும் சந்தேகப்பட்டு, அவர்களைக் கொல்ல முடிவு செய்கிறார். இதற்கிடையில், கண்ணாம்பா தனது மருமகளுக்கு அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டு இறந்து விடுகிறார்.

குணசேகரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக நடித்துத் தனது மைத்துனி சுகுணாவிடம் முறைகேடாக நடக்கிறான். சுகுணா அவனைக் கன்னத்தில் அறைகிறாள். இதைப் பார்த்த சுகுணாவின் கணவன் உண்மையை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்கிறான். குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்தது. குணசேகரன் தொடருந்தில் செல்லும் போது, ஓர் இளம் பெண் தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தில் படுத்திருக்க, தொடருந்து சரியான சரியான நேரத்தில் நிற்கிறது, குணசேகரன் அந்தப் பெண் மாலதி என்பதைக் கண்டுபிடித்து, அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
மணப்பந்தல்
இசையமைப்பு
வெளியீடு1961
ஒலிப்பதிவு1961
நீளம்27:28
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ம. சு. விசுவநாதன்
டி. கே. ராமமூர்த்தி

கண்ணதாசனின் பாடல்களுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[3] பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, டி. எஸ். பகவதி, எஸ். ஜானகி & எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடியிருந்தனர்.[2]

இல. பாடல் பாடியோர் இயற்றியவர் நீளம் (நி:செ)
1 "உனக்கு மட்டும் உனக்கு மட்டும்" பி. சுசீலா கண்ணதாசன் 3:21
2 "ஒரே ராகம் ஒரே தாளம்" 3:36
3 "உனக்கு மட்டும் உனக்கு மட்டும்" (சோகம்) 2:27
4 "பார்த்துப் பார்த்து நின்றதிலே" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 3:28
5 "முத்து முத்துப் பச்சரிசி" எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி 4:41
6 "உடலுக்கு உயிர் காவல்" பி. பி. ஸ்ரீனிவாஸ் 4:10
7 "அம்மாவுக்கு மனசுக்குள்ளே" எஸ். சி. கிருஷ்ணன் 3:13
8 "பெற்றெடுத்து பெயருமிட்டு" டி. எஸ். பகவதி 3:52

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படம் டி. ஆர். ராமண்ணா, டி. ஆர். ராஜகுமாரி ஆகியோரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆர். ஆர். பிக்சர்சு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

மணப்பந்தல் 1961 சனவரி 14 பொங்கல் வெளியீடாக வெளியிடப்பட்டது.[3] பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்பந்தல்_(திரைப்படம்)&oldid=3949818" இலிருந்து மீள்விக்கப்பட்டது