ஈ. வி. சரோஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈ. வி. சரோஜா

ஈ. வி. சரோஜா (1935நவம்பர் 3, 2006) ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஆவார். ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடித்த தமிழ்ப் படங்கள்[தொகு]

என் தங்கை திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மதுரை வீரன், படிக்காத மேதை, வீரத்திருமகன், குலேபகாவலி, பாக்கிய லட்சுமி, கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் சுமார் 70 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார் ஈ.வி சரோஜா. இவரது கணவர் காலஞ்சென்ற இயக்குநர் டி. ஆர். ராமண்ணா ஆவார்.

விருதுகள்[தொகு]

  • 2002 ஆம் ஆண்டில் இவர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் நாட்டிய செல்வம் விருதினைப் பெற்றார்.
  • திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக 2002-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது 2004 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

மறைவு[தொகு]

நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈ. வி. சரோஜா அவர்கள் நவம்பர் 3, 2006 அன்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._வி._சரோஜா&oldid=2113846" இருந்து மீள்விக்கப்பட்டது